விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா நீக்கமா? திருமாவளவன் சொன்ன பரபரப்பு தகவல்!
Aadhav Arjuna vs Thirumavalavan: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவை கடுமையாக விமர்சித்து, தமிழகத்தில் மன்னராட்சி நடப்பதாகவும், பிறப்பால் முதலமைச்சர் உருவாகக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
Aadhav Arjuna
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பதிலாக அக்கட்சியை சேர்ந்த துணைபொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா பேச்சு தான் தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. அப்படி என்ன பேசினார் என்பதை பார்ப்போம்.
Aadhav Arjuna
தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை. 2026 தேர்தலில் தமிழகத்தில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. மன்னராட்சியை எதிர்த்தால் சங்கி என்று சொல்கிறார்கள். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது. கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும் என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விஷயம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Aadhav Arjuna
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரை கட்சியில் இருந்து நீக்கம் வேண்டும் என திமுகவினர் கூறிவருகின்றனர். இதனால் திருமாவளவனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை பாயுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
Aadhav Arjuna
இந்நிலையில் சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மேலிடப்பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில், திருமாவளவன், துணை பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார் எம்பி, சிந்தனை செல்வன், வன்னியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், இதில் ஆதவ் அர்ஜூனா பங்கேற்கவில்லை.
Thirumavalavan
இந்த கூட்டத்துக்கு பிறகு திருமாவளவனிடம் ஆதவ் அர்ஜுனா மீதான நடவடிக்கை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசிக-வில் இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை. நிர்வாகிகள் பலருடன் பேச வேண்டி இருப்பதாகவும் அதன் பின்னரே முடிவு செய்யப்படும் என்றார்.