- Home
- Tamil Nadu News
- Ration Card: புதிய ரேஷன் கார்டு ரெடி.. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தோருக்கு தமிழக அரசின் குட்நியூஸ்!
Ration Card: புதிய ரேஷன் கார்டு ரெடி.. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தோருக்கு தமிழக அரசின் குட்நியூஸ்!
New Ration Card For Magalir Urimai Thogai: தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குட்நியூஸ் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கு ரேஷன் கார்டு முக்கியம் என்பதால் தமிழக அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மகளிர் உரிமைத் தொகைக்கு ரேஷன் கார்டு முக்கியம்
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் எனப்படும் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நடுத்தர மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களே அத்தியாவசிய தேவையாக உள்ளது. தமிழக அரசின் பொது விநியோகத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Magalir Urimai Thogai) உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு குடும்ப அட்டை (Ration Card) மிக முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது.
புதிய ரேஷன் கார்டுகள் குறித்து குட்நியூஸ்
இதனால், புதிய ரேஷன் கார்டு கோரியும், திருத்தங்கள் செய்யக் கோரியும் பொதுமக்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிகவழியான, மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக சுமார் 46,000 புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகத்திற்குத் தயாராக இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
மீண்டும் தொடங்கிய பணிகள்
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளும், விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் செயல்முறைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்பொழுது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த மே 15 முதல் இந்த பணிகள் மீண்டும் தீவிரமாகத் தொடங்கியுள்ளன.
தவெக அமைச்சர் உறுதி
இதுகுறித்து அண்மையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன், தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விரைந்து ரேஷன் கார்டுகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை சுமார் 2,25,000 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக தகுதிவாய்ந்த 46,000 விண்ணப்பதாரர்களின் அட்டைகள் அச்சிடப்பட்டு விநியோகத்திற்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
இன்னும் சில தினங்களில் இந்த புதிய குடும்ப அட்டைகளை விநியோகிக்கும் பணியைத் தமிழக முதல்வர் விஜய் முறைப்படி தொடங்கி வைக்கத் திட்டமிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, எஞ்சிய தகுதியான விண்ணப்பங்களும் படிப்படியாகப் பரிசீலிக்கப்பட்டு, அனைவருக்கும் ரேஷன் கார்டுகள் தடையின்றி வழங்கப்படும் எனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டோட்டலாக மாறும் ரேஷன் கடைகள்
தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ரேஷன் கடைகளை டோட்டலாக மாற்றும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது சர்க்கரை, துவரம் பருப்பு மட்டுமன்றி, ரேஷன் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையுமே பாதுகாப்பான முறையில் பாக்கெட்டுகளாக மாற்றி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் தரம் குறைவு, எடை குறைப்பு உள்ளிட்ட பிரச்சனை தீரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதியவர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தையும் தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

