- Home
- Tamil Nadu News
- TASMAC: இனி தப்பிக்கவே முடியாது! டாஸ்மாக்கின் சூப்பர் அறிவிப்பால் குஷியில் துள்ளி குதிக்கும் குடிமகன்கள்!
TASMAC: இனி தப்பிக்கவே முடியாது! டாஸ்மாக்கின் சூப்பர் அறிவிப்பால் குஷியில் துள்ளி குதிக்கும் குடிமகன்கள்!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஸ்கேனிங் முறையில் மது விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
மதுவிலக்கு ஆயுத் தீர்வுதுறை
TASMAC Shop: தமிழக அரசின் மதுவிலக்கு ஆயுத் தீர்வுதுறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதுவும் பண்டிகை நாட்களான தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் வந்துவிட்டால் வருமானம் இரட்டிப்பாகும். அதேபோல் வார இறுதி நாட்களில் ரூ.150 முதல் ரூ.200 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகும். தமிழகத்தில் வருமானத்தை கொட்டி கொடுக்கும் துறையாக டாஸ்மாக் துறை இருந்து வருகிறது. அதுமட்டுமல்ல அரசு இயந்திரமே டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய இரண்டு துறையில் வருமானத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. 2024-2025ம் நிதி ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதன்படி 2023 - 2024 நிதியாண்டை விட 2,489 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள்
இந்நிலையில் அரசு விதித்த விலையை விட 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் அவ்வப்போது டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் குடிமகன்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தான் டாஸ்மாக் மதுக்கடைகள் டிஜிட்டல் மயமாக்க அரசு திட்டமிட்டது. அதன் படி மதுபாட்டில்களுக்கு கண்டிப்பாக ரசீது கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெறுவது தெரியவந்தது.
பார் கோடு ஸ்கேன் செய்து பில்
இதனையடுத்து மதுபான பாட்டிலை பார் கோடு ஸ்கேன் செய்து பில் வழங்கி விற்பனை செய்யும் முயற்சியானது முதலில் ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் செயல்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் சென்னை புறநகர் பகுதிகளிலும் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மதுபானத்திற்கு பில் கொடுக்கும் திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஸ்கேனிங் முறையில் மது விற்பனை
இந்நிலையில், தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் ஸ்கேனிங் முறையில் மது விற்பனை செய்யப்படும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி கோவையிலும் மது பாட்டில்கள் ஸ்கேன் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக பணிபுரியும் ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில் நேற்று முதல் ஊழியர்கள் ஸ்கேன் செய்த பிறகே மது பானங்களை விற்பனை செய்கின்றனர். மதுபானங்களை வாங்க வருபவர்களும் காத்திருந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.
க்யூ ஆர் கோடு
இந்த ஸ்கேனிங் முறையாக ஒவ்வொரு மது பாட்டிலிலும் க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்டு உள்ளது. இதற்காக வழங்கப்பட்ட ஸ்கேனிங் கருவிகளை ஊழியர்கள் மது பாட்டில்களில் உள்ள க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்த பிறகு மதுபானம் மற்றும் அவற்றின் விலை விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னரே அந்த மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்கேனிங் முறையால் ஒரு கடையில் எவ்வளவு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது அதன் மதிப்பு என்ன என்பது உடனுக்குடன் அதிகாரிகளுக்கு சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.