- Home
- Tamil Nadu News
- சென்னை அருகே தொழிற்பூங்கா; தமிழக அரசு – தைவான் ஒப்பந்தம்; 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
சென்னை அருகே தொழிற்பூங்கா; தமிழக அரசு – தைவான் ஒப்பந்தம்; 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Indo-Taiwan Industrial Park near Chennai : சென்னை அருகே புதிதாக தொழிற்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு மற்றும் தைவான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டம் மூலமாக 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Indo-Taiwan Industrial Park near Chennai : சென்னைக்கு அருகில் புதிதாக இந்தியா தைவான் தொழிற்பேட்டை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல் தமிழக அரசு மற்றும் தைவான் வர்த்தகம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தொடர்ந்து தைவான் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு அந்நிய நேரடி முதலீடுகள் இருந்து வருகிறது. மேலும் வெளிநாட்டிலிருக்கும் உற்பத்தி தளங்கள் இந்தியாவிற்கு மாற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் தமிழக அரசு மற்றும் தைவான் வர்த்தகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமானது இன்று கையெழுத்தானது. சென்னைக்கு அருகில் புதிதாக தொழிற்பூங்கா அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திட்டமிட்டிருந்தது. இந்த திட்டம் இப்போது தைவான் நாட்டு அரசின் மூலமாக நிறைவேறியிருக்கிறது. இந்த சிறப்பு திட்டத்திற்காக தமிழக அரசு மற்றும் தைவான் அரசு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த திட்டத்திற்காக ரூ.1000 கோடி முதலீடு செய்ய தைவான் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலமாக தமிழக மக்களுக்கு 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று சட்டபேரவையில் பேசிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சென்னைக்கு அருகில் அமைக்கப்பட இருக்கும் தைவான் தொழிற்பூங்கா பற்றி குறிப்பிட்டார். தமிழக அரசு பொருளாதார ரீதியாக வளர்ச்சி மிக்க மாநிலமாக இருப்பதற்கு இப்போது தைவான் முதலீடும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலமாக மேலும் பல தைவான் தொழில் நிறுவனங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யும் என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் தான் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பேசிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறுகையில், நேற்று சட்டமன்றத்தில் தைவான் தொழில்பூங்கா பற்றி பேசினோம். இன்று கையெழுத்தாகியிருக்கிறது. ஜவுளி, காலணி பாகங்கள், எலக்ட்ரானிக் பாகங்கள் போன்ற முக்கியமான துறைகளில் கிட்டத்தட்ட 20000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமாக ரூ.1000 கோடியை முதலீடாக ஈர்ப்பதை தமிழக அரசு லட்சியமாக கொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இறுதியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக முக்கிய காரணமாக இருந்த TCC சென்னையின் தலைவர் எரிக் சாங் மற்றும் தைவான் வர்த்தக சபை இந்தியாவின் துணை பொது தலைவர் சைமன் லீ ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.