MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Durai Dayanidhi: முதல்வர் ஸ்டாலினுக்கு போன தகவல்! 294 நாட்களுக்கு பிறகு துரை தயாநிதி! வைரலாகும் போட்டோ!

Durai Dayanidhi: முதல்வர் ஸ்டாலினுக்கு போன தகவல்! 294 நாட்களுக்கு பிறகு துரை தயாநிதி! வைரலாகும் போட்டோ!

Durai Dayanidhi Discharged: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான துரை தயாநிதி, உடல்நலக்குறைவு காரணமாக பல மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Sep 24 2024, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Durai Dayanidhi

Durai Dayanidhi

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி, இவர் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். இவரது மகன் துரை தயாநிதி, தமிழ் திரைத்துறையில் சிறந்து விளங்கியவர் பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Apollo Hospitals

Apollo Hospitals

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனிலுள்ள  வீட்டில் வசித்து வந்த வந்த துரை தயாநிதிக்கு  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மூளையில் சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகின.

இதையும் படிங்க: Government School Holiday: காலாண்டுத் தேர்வு விடுமுறை அதிகரிப்பு? வெளியாகப் போகும் அறிவிப்பு?
 

34
CMC Hospital

CMC Hospital

கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி கடந்த மாதம் மார்ச் 14ம் தேதி வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  அங்கு அவருக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. அவ்வப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று துரை தயாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அவருடைய உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் சில வதந்திகள் அவ்வப்போது பரப்பப்பட்டு வந்தன. 

இதையும் படிங்க:  Government School Teacher: சம்பளத்தில் கை வைத்த பள்ளிக்கல்வித்துறை! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்! நடந்தது என்ன?

44
Durai Dayanidhi Discharged

Durai Dayanidhi Discharged

இந்நிலையில், சிஎம்சி மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி இன்று காலை 10.30 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் குடும்பத்தினர் துரை தயாநிதியை அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய துரை தயாநிதியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.கிட்டதட்ட 294 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு துரை தயாநிதி சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved