- Home
- Tamil Nadu News
- ஆசிரியர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
ஆசிரியர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
உதவி பேராசிரியர் பணிக்கான செட் தேர்வு மார்ச் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த தேர்வை கணினி வாயிலாக நடத்தும். தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆசிரியர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பள்ளி மற்றும் கல்லூரிக்களில் மாணவர்களின் கல்வியறவு மேம்பட ஆசிரியர்கள் பங்கு முக்கியமானது. அந்த வகையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு தேர்வாதனது நடத்தப்படுகிறது. இதன் பணி நெட் தேர்வு அல்லது செட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் இணைய முடியும், அந்த வகையில் நெட் தேர்வை யுஜிசி சார்பில் தேசிய தேர்வு முகமையும், செட் தேர்வை மாநில அளவிலான தகுதித்தேர்வை அரசின் சார்பில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகமும் நடத்தும்.
உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு
அதன் படி செட் தேவை தமிழக அரசு சார்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 3 ஆண்டுகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு தேர்வுக்கான பணிகள் தொடங்கியது. சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தேர்வுகள் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து செட் தேர்வை நடத்தும் பொறுப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்து தமிழக அரசு ஒப்படைத்தது.
மாநில தகுதித் தேர்வினை (SET) தேதி அறிவிப்பு
இருந்த போதும் செட் விண்ணப்பதார்களின் விவரங்கள் ஒப்படைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் செட் தேர்வு நடத்தப்படவில்லை. எனவே எப்போது தேர்வு நடைபெறும் என ஆசிரியர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில் மாநில தகுதித் தேர்விற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில தகுதித் தேர்வினை (SET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்திட அரசு ஆணையிட்டிருந்தது.
ஹால் டிக்கெட் எப்போது.?
அதன் தொடர்ச்சியாக, மாநில தகுதித் தேர்வினை வருகின்ற மார்ச் மாதம் 6,7.8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி (CBT) வாயிலாக நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.