MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamilnadu Rain : தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்களில் கன மழை.! எந்த எந்த மாவட்டங்கள்.? வானிலை மையம் தகவல்

Tamilnadu Rain : தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்களில் கன மழை.! எந்த எந்த மாவட்டங்கள்.? வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்த நிலையில், தற்போது தென் மாவட்டமான ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

2 Min read
Author : Ajmal Khan
Published : Dec 10 2023, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தென் மாவட்டங்களில் கன மழை

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டி போட்ட வடு இன்னும் ஆராத நிலையில், மீண்டும் சென்னைக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்து வானிலை மையம் அடுத்து வரும் தினங்களில் தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி இருக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
tamilnadu heavy rain

tamilnadu heavy rain

மழை பெய்ய வாய்ப்பா.?

இதன் காரணமாக இன்று (10.12.2023) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

34

தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு

நாளை (11.12.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12.12.2023 முதல் 14.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

44

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் வெளியிடவில்லை.

இதையும் படியுங்கள்

வேலைக்கும் போகலை.. உடமையையும் இழந்துட்டாங்க.. வெள்ள பாதிப்பு நிவாரணத் தொகையை ரூ. 12,000 ஆக உயர்த்திடுக- இபிஎஸ்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
கனமழை
தமிழ்நாடு மழை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை.. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
Recommended image2
Now Playing
தமிழக புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் பொறுப்பேற்பு! | Mahesh Kumar Aggarwal IPS
Recommended image3
College Student: மாணவர்களுக்கு மாதம் ரூ.18,000 அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved