MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது - வைகோ விமர்சனம்..!

மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது - வைகோ விமர்சனம்..!

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்காதது - மக்கள் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பதை காட்டுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Feb 02 2026, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு பொய்த்துள்ளது
Image Credit : social media

பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு பொய்த்துள்ளது

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026–2027 மத்திய நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதை கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மக்கள் நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் அந்த எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மக்கள் சுமையை குறைக்க மனமில்லை
Image Credit : ANI

மக்கள் சுமையை குறைக்க மனமில்லை

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 50 டாலர்களாக குறைந்திருந்த போதும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படாதது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மக்கள் மீது சுமையை குறைக்க மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை.

11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பது நடைமுறை சார்ந்ததல்ல. இது நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைக்கு நல்ல அறிகுறி அல்ல என்றும் தெரிவித்தார்.

34
மெட்ரோ திட்டம்
Image Credit : our own

மெட்ரோ திட்டம்

மேலும் கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்பாலைகள் மற்றும் ஜவுளித் துறைக்காக எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். அதேபோல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததும் வருத்தமளிப்பதாக கூறினார். இருப்பினும் சுங்கவரி குறைத்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என குறிப்பிட்டார்.

44
ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்
Image Credit : our own

ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்

அரசியல் நிலவரம் குறித்து பேசிய வைகோ, ஆட்சியில் அதிகாரப் பங்கு கோரிக்கை வைப்பது மதிமுகத்தின் நோக்கம் அல்ல. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். திராவிட மாடல் ஆட்சி தொடரும். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டளவில் நல்ல பெயர் இல்லை. இரட்டை இலக்கில் தொகுதிகள் குறித்த பேச்சுகள் தற்போது முன்கூட்டியே பேச முடியாது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகே சீட் பங்கீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தன்னுடைய பரப்புரை நடைபெறும் என்றும் வைகோ கூறினார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
வைகோ மதிமுக
திமுக
திமுக கூட்டணி கட்சிகள்
தமிழ்நாடு அரசு
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ₹3000 கோடி கடன் உதவி: மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி !
Recommended image2
Now Playing
84 ஆண்டு பொதுவாழ்க்கையில் கண்டிராத அரிய வாய்ப்பு : கோவையில் கி.வீரமணி செய்தியாளர்கள் சந்திப்பு
Recommended image3
Now Playing
இளைஞர்கள் திராவிட லட்சியங்களை அறிந்துகொள்ள வேண்டும் ! மு.க. ஸ்டாலின் பேச்சு
Related Stories
Recommended image1
Now Playing
எடப்பாடி பழனிச்சாமிக்கு ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தது குறித்து பேச தகுதி இல்லை ! வைகோ பேட்டி
Recommended image2
அதிமுக தனிக்கட்சி அல்ல; பாஜகவின் கிளை அமைப்பு.. போட்டுத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved