MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! மீண்டும் புதிதாக எப்போது விண்ணப்பிக்கலாம்? வெளியான சூப்பர் அப்டேட்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! மீண்டும் புதிதாக எப்போது விண்ணப்பிக்கலாம்? வெளியான சூப்பர் அப்டேட்

Magalir Urimai Thogai: புதிதாக ரேஷன் கார்டு வாங்கிய பெண்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் லட்சக்கணக்கானோர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க காத்திருக்கின்றனர்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 30 2026, 06:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த திட்டத்தால் மாதந்தோறும் ஒரு கோடியே 16 லட்சம் பேரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வந்தது.

25
Image Credit : Asianet News

தமிழ்நாட்டை பின்பற்றி கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பீகார், புதுச்சேரி, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் வெவ்வேறு பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பின்னர் இந்த திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு 1.31 கோடி பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். மேலும் புதிதாக ரேஷன் கார்டு வாங்கிய பெண்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் லட்சக்கணக்கானோர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க காத்திருக்கின்றனர்.

Related Articles

Related image1
ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் பின்னணியில் மிகப் பெரிய சதி! ஆட்சி மாற்றம் நடக்கட்டும்! சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்
Related image2
சென்னை, கோவையில் இடி மின்னலுடன் மழை அடிச்சு ஊத்தப்போகுதா? வானிலை மையம் சூப்பர் அப்டேட்!
35
Image Credit : tndipr

இதனிடையே தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சேர்ப்பது தொடர்பான அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்த்து காத்திருகின்றனர். ஆனால் எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

45
Image Credit : tndipr

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதை அடுத்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் புதிய பயனாளிகள் சேர்ப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும். மேலும் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2000 எந்த மாதம் முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் அந்த நேரத்திலும் வெளியாகும்.

55
Image Credit : Google

அதேநேரத்தில், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றால் தற்போது செயல்படுத்தப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முழுமையாக நிறுத்தப்படும். அதற்கு மாற்றாக அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போல் பெண்களுக்கான குல விளக்குத் திட்டம் செயல்படுத்தப்படும். அத்திட்டத்திலும் மாதம் ரூ.2000 வழங்கப்படும். இதில் ஏதாவது புதிய விதிகள் சேர்க்கப்படுமா என்பது தெரியவரும். திமுக ஆட்சிக்கு வந்தால் நடைமுறையில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் அதிமுக புதிதாக ஆட்சிக்கு வந்தால், உடனடியாக குல விளக்கு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும். இந்த முடிவை அறிந்து கொள்ள தமிழ்நாட்டு பெண்கள் மே 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகளிர் உரிமைத் தொகை
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
திமுக
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரே ஃபேமிலியில் இருந்து களம் காணும் 3 வேட்பாளர்கள்... 2026 தேர்தலில் இப்படி ஒரு குடும்ப அரசியலா?
Recommended image2
Now Playing
சென்னையில் வீதி வீதியாக சென்ற விஜய்.! அண்ணா! அண்ணா! என பின் தொடர்ந்த பெருங்கூட்டம்.!
Recommended image3
Now Playing
இது நாடா? இல்லை காடா?... விஜய் வருகையால் ஸ்தம்பித்த பெரம்பூர் பகுதி
Related Stories
Recommended image1
ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் பின்னணியில் மிகப் பெரிய சதி! ஆட்சி மாற்றம் நடக்கட்டும்! சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்
Recommended image2
சென்னை, கோவையில் இடி மின்னலுடன் மழை அடிச்சு ஊத்தப்போகுதா? வானிலை மையம் சூப்பர் அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved