- Home
- Tamil Nadu News
- தவெக தொண்டர்கள் குஷியோ குஷி! நாளை டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிப்பு வாபஸ்! நடந்தது என்ன?
தவெக தொண்டர்கள் குஷியோ குஷி! நாளை டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிப்பு வாபஸ்! நடந்தது என்ன?
தமிழக வெற்றிக்கழக மாநாட்டையொட்டி மதுரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவு சில மணி நேரங்களில் திரும்பப் பெறப்பட்டது.

மதுரையில் நாளை தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட கூடக்கோவில், மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு, தூம்பங்குளம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, வளையங்குளம், திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு, ஆலம்பட்டி, மொட்டமலை, தோப்பூர், கூத்தியார்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 14 டாஸ்மாக் கடைகள் மற்றும் 4 தனியார் மதுபான விடுதிகளை மாநாடு நடைபெறும் நாளில் மூட மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால், அறிவித்தத சில மணி நேரங்களிலேயே அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து, நாளை பாரபத்தி பகுதிகளிலும் மதுரையின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அறிவிப்பு திரும்ப பெறப்பட்டதற்கான காரணம் மாநாடு காரணமாக பொதுமக்கள் மற்றும் மாநாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்களால் வரும் இடையே பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை காரணத்தால் முதலில் டாஸ்மாக் மூட உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பின்னர் மாநாடு அமைதியாக நடைபெறும், சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படாது என்பதைக் கருத்தில் கொண்டு, மேலும் திடீர் முடிவால் பொதுமக்களுக்கு சிரமம் எதுவும் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.