MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அப்பாடா! இல்லத்தரசிகளுக்கு நிம்மதி! LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

அப்பாடா! இல்லத்தரசிகளுக்கு நிம்மதி! LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

கடந்த 6 நாட்களாக நடந்து வந்த தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 14 2025, 02:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்
Image Credit : Asianet News

LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்

தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரிகள் சங்கம் கடந்த 9ம் தேதி முதல் திடீரென காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. 2025-30 ஆம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன. எண்ணெய் சந்தை நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய ஏல முறையின் கீழ் 3,478 லாரிகளுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன?
Image Credit : X

முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

ஆனால் தற்போது 5,514 லாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் 2,036 லாரிகள் ஒப்பந்தங்களை இழக்கும் நிலை உருவாகி, ஓட்டுநர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஏல விதிகளை ரத்து செய்து விட்டு பழைய ஏல விதிமுறைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.

சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு அபாயம்

எண்ணெய் நிறுவனங்கள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் வேலைநிறுத்த போராடத்தை தொடர்ந்து வந்தனர். LPG லாரிகள் வேலை நிறுத்தத்தால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதற்கிடையே டேங்கர் லாரிகள் வேலை நிறுத்ததுக்கு தடை விதிக்க வேண்டும் என 3 எண்ணெய் நிறுவனங்கள் சென்னை உயர்நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.

34
ஒப்பந்தத்தை நீட்டிக்க தயார்
Image Credit : Social media

ஒப்பந்தத்தை நீட்டிக்க தயார்

அப்போது 'டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. புதிய டெண்டர் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஆகவே இப்போதைய ஒப்பந்தத்தை 2026ம் ஆண்டு வரை நீட்டிக்க தயாராக இருக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் டெண்டர் பணிகள் முடிக்கப்படும்' என்று எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

44
வேலை நிறுத்தம் வாபஸ்
Image Credit : Gemini

வேலை நிறுத்தம் வாபஸ்

எண்ணெய் நிறுவனங்களின் கருத்தை ஏற்றுக் கொண்ட தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இதனால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த ஒரு வேலை நிறுத்தத்திலும் ஈடுபடக்கூடாது என்று டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எரிவாயு உருளை
டேங்கர் லாரி வேலைநிறுத்தம்
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
Recommended image2
Now Playing
தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
Recommended image3
Now Playing
வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
Related Stories
Recommended image1
சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! இல்லத்தரசிகள் ஷாக்! LPG லாரிகள் வேலை நிறுத்தம்!
Recommended image2
LPG Cylinder Price: அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு குட்நியூஸ்! சிலிண்டர் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved