பட்டப்பகலில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிப் படுகொலை! அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்!
காரைக்குடியில் ரவுடி மனோஜ் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rowdy Manoj
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் சேர்வா ஊரணி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மனோ என்கிற மனோஜ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கஞ்சா விற்பனையில் மனோஜ் ஈடுபட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிலையில் இன்று காவல் நிலையத்தில் கையெழுத்திட தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் வந்துள்ளார்.
Karaikudi Rowdy Manoj Murder
அப்போது காரில் வந்த மர்ம கும்பல் மனோஜை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தப்பிக்க முயன்றார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தது. இதனை தடுக்க வந்த இரண்டு நண்பர்களுக்கும் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது. கொலையை கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர்.
இதையும் படிங்க: அதிகாலையில் அலறிய தலைநகர் சென்னை! ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்! யார் இந்த ஹைகோர்ட் மகாராஜா?
Police investigation
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட மனோஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெட்டு காயம் ஏற்பட்ட இரண்டு பேரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகலில் கொலை நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 15,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Student Murder
அதேபோல் இன்று காலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நார்த்தவாடா கிராமத்தில் பூண்டியை சேர்ந்த லோகேஷ் (19) என்ற மாணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பேருந்து நிறுத்தத்தில் நின்றி லோகேஷை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து திருவிலாங்கோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.