நாதகவுக்கு குட்பாய்! திமுகவில் இணையும் காளியம்மாள்? சீமான் ரியாக்ஷன் என்ன?
நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், காளியம்மாள் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து சீமான், காளியம்மாள் முடிவெடுக்க சுதந்திரம் இருப்பதாக கூறியுள்ளார்.

நாதகவுக்கு குட்பாய்! திமுகவில் இணையும் காளியம்மாள்? சீமான் ரியாக்ஷன் என்ன?
கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி மாற்று கட்சியில் இணைந்து அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.
காளியம்மாள்
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே அடுத்த மாதம் நடைபெறும் நிகழ்ச்சியின் அழைப்பிதழில் நாதக பொறுப்பை குறிப்பிடாமல் காளியம்மாள் பெயர் இடம்பெற்றுள்ளது. அதில், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நாதக காளியம்மாளின் பெயருக்கு கீழ் சமூக செயல்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.
திமுகவில் இணையும் காளியம்மாள்
இதனால் காளியம்மாள் கட்சியில் இருந்து விலகி விட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவர் ஆளும் திமுகவுடன் இணைய உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சீமான்
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் காளியம்மாள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பருவக் காலங்களில் இலையுதிர் காலம் போல எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். நாதகவில் இருப்பதற்கும், இயங்குவதற்கும், விலகுவதற்கும் தங்கைக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அதுகுறித்து முடிவெடுக்கும் முழு உரிமை அவருக்கு உண்டு.
காளியம்மாள் குறித்து சீமான் கருத்து
காளியம்மாள் முதலில் சமூக செயற்பாட்டாளராகத்தான் இருந்தார். அவரை அழைத்து வந்ததும் நான் தான். கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும் செல்லலாம், அது அவர்களின் முடிவு, உரிமை. கட்சிக்குள் வந்தால் வாருங்கள் நன்றி என்று சொல்வோம். செல்வதாக இருந்தால் வணக்கம் வாழ்த்துகள் என்று சொல்வோம். இதுதான் எங்கள் கொள்கை என சீமான் தெரிவித்துள்ளார்.