MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாதகவில் இருந்து விலகினார் காளியம்மாள்? வைரலாகும் அழைப்பிதழ்! எந்த கட்சியில் இணைகிறார்?

நாதகவில் இருந்து விலகினார் காளியம்மாள்? வைரலாகும் அழைப்பிதழ்! எந்த கட்சியில் இணைகிறார்?

நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், காளியம்மாள் நாதக பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Feb 22 2025, 11:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நாதகவில் இருந்து விலகினார் காளியம்மாள்? வைரலாகும் அழைப்பிதழ்! எந்த கட்சியில் இணைகிறார்?

நாதகவில் இருந்து விலகினார் காளியம்மாள்? வைரலாகும் அழைப்பிதழ்! எந்த கட்சியில் இணைகிறார்?

நாம் தமிழர் கட்சியில் கடந்த சில நாட்களாகவே என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு அனைத்து மர்மமாகவே இருந்து வருகிறது. அந்த கட்சியில் இருந்து பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் சீமான் மீது குற்றச்சாட்டை முன்வைத்து அடுத்தடுத்து விலகி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

26
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணிப் பாசறை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணிப் பாசறை ஒருங்கிணைப்பாளர்

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணிப் பாசறை ஒருங்கிணைப்பாளர்களும், சிறப்பான பேச்சாளருமான காளியம்மாள். இவர் நாம் தமிழர் கட்சி சார்பில் வடசென்னை மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளராகவும், பூம்புகார் பகுதியில் எம்.எல்.ஏ. வேட்பாளராகவும் போட்டியிட்டார். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் இவரது பேச்சும், பிரச்சாரமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

36
சீமான்

சீமான்

இந்நிலையில் காளியம்மாளை பிசிறு என்று விமர்சித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விரைவில் வேறு கட்சியில் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியான வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதை காளியம்மாள் திட்டவட்டமாக மறுத்தார். 

46
அழைப்பிதழ் வைரல்

அழைப்பிதழ் வைரல்

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே அடுத்த மாதம் நடக்கும் நிகழ்ச்சியின் அழைப்பிதழில் நாதக பொறுப்பை குறிப்பிடாமல் காளியம்மாள் பெயர் இடம்பெற்றுள்ளது வைரலாகி வருகிறது. 

56
காளியம்மாள் விலகல்

காளியம்மாள் விலகல்

அதில், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நாதக காளியம்மாள் ஒரே மேடையில் ஏறுகிறார்.  உறவுகள் சங்கமத்தில் பங்குபெறும் அரசியல் பிரபலங்களின் பெயர் தங்கள் கட்சியின் பெயர், பொறுப்புகளுடன் இடம்பெற்றுள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சியில் பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் பெயர் மட்டும் சமூக செயற்பாட்டாளர் என இடம் பெற்றுள்ளது. 

66
நாதக பொறுப்புகளில் இருந்து காளியம்மாள் விலகல்

நாதக பொறுப்புகளில் இருந்து காளியம்மாள் விலகல்

நாதக பொறுப்புகளில் இருந்து காளியம்மாள் விலகியுள்ளதால் அவர் தன்னை சமூக செயற்பாட்டாளர் என அடையாளப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அழைப்பிதழில் நாம் தமிழர் பொறுப்புடன் பெயர் இல்லாதது குறித்த கேள்விக்கு காளியம்மாள் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். கட்சி சார்பற்ற நிகழ்ச்சி என்பதால் நாதக பொறுப்புடன் பெயரை அச்சிடவில்லை என காளியம்மாள் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சீமான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved