இனி லீவு ஈசியா எடுக்கலாம்.! அரசு ஊழியர்கள். ஆசிரியர்களுக்கு இன்று முதல் குட் நியூஸ்
தமிழக அரசு ஊழியர்களுக்கான களஞ்சியம் கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சம்பள விவரம், விடுப்பு விண்ணப்பம், ஓய்வூதிய விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த செயலி மூலம் பெறலாம்.
old pension scheme
அரசு ஊழியர்களுக்கு புதிய செயலி
அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விடுப்பு, சம்பள விவரம், வருமான வரி, ஓய்வூதிய விவரம் உள்ளிட்ட தகவல்களை ஒரே நொடியில் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முழுமையாக செயல்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்கு துறை சார்பாக அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பயன்பாட்டிற்கான களஞ்சியம் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
kalanjiyam app
விடுப்பு, சம்பள விவரம் தெரியலாம்
இந்த களஞ்சியம் கைப்பேசி செயலி ஜனவரி 1ஆம் தேதி முதல்(நாளை முதல்) முழுமையான பயன்பாட்டிற்கு வர இருப்பதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம், அரசு ஊழியர்கள் தங்களது சம்பள விவரம். Pay Drawn Particulars ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் மேலும் முக்கியமாக விடுப்புகள் ( தற்செயல் விடுப்பு. ஈட்டிய விடுப்பு ஆகியவற்றிற்கும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதே போல பண்டிகை முன்பணம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம் ஆகியவற்றையும் இச்செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் பண்டிகை முன்பணம் மற்றும் ஈட்டிய விடுப்பு தொடர்பான செயல்முறை ஆணைகளும் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
kalanjiyam mobile application
ஓய்வூதிய தகவல்கள்
பொது வருங்கால வைப்பு நிதி (CIF) மற்றும் பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் (CTS கான மீதத்தொகையை சரிப்பார்த்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒய்வூதியர்கள் தங்களின் வருடாந்திர நேர்காணலை இச்செயலி மூலம் செய்யலாம் எனவும் மாத ஓய்வூதியம் விவரம், பார்ம் 16 ஆகியவற்றை பார்த்துக்கொள்ளவும் பதிவிறக்கம் செய்யம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் மொபைல் போனிலே Google Play Store மூலம் களஞ்சியம் கைப்பேசி செயலியை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
kalanjiyam mobile application
நாளை முதல் களஞ்சியம் செயலி
இந்த களஞ்சியம் செயலி தொடர்பான சந்தேகங்களை அறிய சம்பளக் கணக்கு அலுவலகம் (வடக்கு), சென்னை 01-யை தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் முழுவதுமாக அமல்படுத்தப்படவுள்ள இந்த களஞ்சியம் செயலியால் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் ஏற்பட்டுள்ளது. சம்பள விவரம், விடுப்பு ஆகியவற்றிற்காக காத்திருக்காமல் எளிதாக இந்த செயலி மூலம் பதிவு செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.
school teacher
ஆசிரியர்கள் கட்டாயம் பதிவிறக்கம்
இந்த நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனைத்து நிலை அலுவலர்கள், ஆசிரியா்கள், பணியாளா்களும் களஞ்சியம் செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுப்பு கோரி விண்ணப்பிக்க, ஓய்வூதிய பலன்கள் கோர, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கருத்துரு அனுப்ப, அனைத்து வகை முன்பணம், சம்பள சான்று பெற அந்த செயலியை பயன்படுத்த வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.