School Student: 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி! ரூ.5000! விட்டுடாதீங்க!
School Student: தமிழக அரசு, நேரு பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்துகிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.5000 வரை பரிசுத்தொகை வழங்கப்படும்.
தமிழக அரசு கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக மாணவர்களின் பசியை போக்கும் வகையில் காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் பயணடைந்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதை போன்று பேச்சுப்போட்டிகள், விளையாட்டி உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்தும் கொடுப்பது மட்டுமல்லாமல் பரிசு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பேச்சு போட்டி நடத்தப்பட்டு மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டும் பேச்சு போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: Government Employee: அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! போனஸ், டிஏ.வில் ஏதாவது டவுட்டா! உடனே இதை செக் பண்ணுங்க
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி நவம்பர் 13ம் தேதி அன்று நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நாமக்கல் அரசு ஆண்கள் (தெற்கு) மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9 மணி முதல் 1 மணி வரை நடத்தப்படும்.
இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2000 வீதம் வழங்கப் பெற உள்ளது.
இதையும் படிங்க: School Teacher : ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை!
பேச்சு போட்டிக்கான தலைப்புகள்:
இந்தியாவின் விடிவெள்ளி – ஜவகர்லால் நேரு, குழந்தைகளை விரும்பிய குணசீலர், பஞ்சசீலக் கொள்கை, போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம். பள்ளி மாணவ மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.