MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தங்கத்தை மிஞ்சும் மல்லிகை பூ விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் பெண்கள்!

தங்கத்தை மிஞ்சும் மல்லிகை பூ விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் பெண்கள்!

திண்டுக்கல் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகை பூ உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகைப்பூவின் விலை கிலோ ரூ.10,000 தாண்டியுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Jan 10 2026, 12:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மதுரை மல்லிகை பூ
Image Credit : Asianet News

மதுரை மல்லிகை பூ

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வத்தலக்குண்டு பகுதியில் ஐ.எஸ்.ஓ தர சான்று கொண்ட மதுரை மல்லிகை பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக நிலவி வரும் அதிகாலை பனிப்பொழிவு காரணமாக மல்லிகைச் செடிகளில் மொட்டுகள் அரும்பு விடாமல் மல்லிகை பூ உற்பத்தி குறைந்தே காணப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
கிலோ ரூபாய் 10,000
Image Credit : Asianet News

கிலோ ரூபாய் 10,000

20 கிலோ உற்பத்தி செய்த மல்லிகை தோட்டங்களில் தற்போது 200 கிராம் பூக்கள் மட்டுமே உற்பத்தி ஆகின்றன. இதனால் நிலக்கோட்டை மலர் சந்தைக்கு கொண்டு வரப்படும் மல்லிகை பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூபாய் 10 ஆயிரத்தை தாண்டியது. பூக்கள் கிடைக்காததால் ஏராளமான வெளிநாடு ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக பூ ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Related image1
பெண்களுக்கு குட்நியூஸ்.. தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ.75,000 பரிசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Related image2
மக்களே உஷார்.. அடுத்த 3 மணிநேரம்.. தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை விடாமல் அடிச்சு ஊத்தப்போகுது?
34
விவசாயிகள் மகிழ்ச்சி
Image Credit : Asianet News

விவசாயிகள் மகிழ்ச்சி

இதேபோல் செடியில் இருந்து பறித்து வரப்படும் அரும்பு மொட்டுக்களுக்கும் நல்ல விலை கிடைத்துள்ளது. ஒரு கிலோ அரும்பு மொட்டுமல்லி ரூ. 5000 முதல் 7500 வரை விற்பனையானது. தொடர்ந்து வரத்து குறைந்து காணப்பட்டால் மல்லிகை பூ விலை இன்னும் பல மடங்கு உயரும் என ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். விவசாயிகளால் கொண்டு வரும் மல்லிகை பூக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும் ஒரு மல்லிகை பூ ரூபாய் 8 தொட்டிருப்பது விவசாயிகள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

44
 முல்லைப் பூ
Image Credit : Asianet News

முல்லைப் பூ

இதேபோல் முல்லைப் பூ ரூபாய் 1800 வரையிலும், பிச்சிப்பூ 1600 வரையிலும் விற்பனையானது. வரத்து குறைந்த போதும் கொண்டுவரப்படும் பூக்களுக்கு நல்ல விலை கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Radhan Pandit : இப்போ முதல்வர்.. அடுத்து பிரதமர்.. ரஷ்யா பிரச்சினையை விஜய் தீர்த்து வைப்பார்.. ஜோதிடர் பேச்சு
Recommended image2
Now Playing
இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Recommended image3
Now Playing
Budget Ooty Trip| 3 இரவுகள் ஊட்டியில் தங்கலாம்..ரயில், ஹோட்டல் எல்லாம் சேர்த்த ஒரே பேக்கேஜ்...விலை ?
Related Stories
Recommended image1
பெண்களுக்கு குட்நியூஸ்.. தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ.75,000 பரிசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image2
மக்களே உஷார்.. அடுத்த 3 மணிநேரம்.. தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை விடாமல் அடிச்சு ஊத்தப்போகுது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved