MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை.? புதிய பாஜக மாநில தலைவர் யார்.?

மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை.? புதிய பாஜக மாநில தலைவர் யார்.?

தமிழக பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணாமலை தொடர்வாரா அல்லது புதிய தலைவரா என்பது குறித்து கட்சிக்குள் பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேச்சு எழுந்துள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 28 2025, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை.?

மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை.?

இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வரும் பாஜக அனைத்து மாநிலங்களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் தென் மாநிலங்களை குறிவைத்த பாஜக முதல் கட்டமாக கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து ஆந்திரா, தெலங்கானா என மெல்ல மெல்ல வளர்ந்து வரும் பாஜக அடுத்த இலக்காக தமிழகம் மற்றும் கேரளாவை குறி வைத்துள்ளது. இதற்காக தமிழக பாஜகவில் அதிரடியாக அரசியல் செய்ய தலைவர்கள் நியமித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தமிழகத்தை குறி வைக்கும் பாஜக

தமிழகத்தை குறி வைக்கும் பாஜக

அதற்கு ஏற்றார் போல தமிழிசை, எல்.முருகன் ஆகியோரை நியமித்த பாஜக தலைமை அடுத்ததாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையை களம் இறக்கியது. அண்ணாமலையும் தனது அதிரடி அரசியலால் ஆளுங்கட்சியான திமுகவிற்கு கடும் போட்டியாக இருந்து வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் கிராமங்களிலும் பாஜகவின் கொடி பறக்க தொடங்கியது. அந்த அளவிற்கு பாஜகவின் வளர்ச்சியில் அண்ணாமலையின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இளைஞர்கள் ஏராளமானோர் அண்ணாமலையை தலைவராக ஏற்றுக்கொண்டு அவரது பின்னால் வர தொடங்கியுள்ளனர்.

35
அண்ணாமலையின் தமிழக அரசியல்

அண்ணாமலையின் தமிழக அரசியல்

அதே நேரம் கூட்டணி கட்சியான அதிமுகவுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுக- பாஜக கூட்டணி முடிவு ஏற்பட்டது. இதனையடுத்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தது மட்டுமில்லாமல் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியே கிடைத்தது. எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ளதால் திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் கள ஆய்வை தொடங்கியுள்ளது. அந்த வகையில் பாஜகவும் புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து வருகிறது.

45
புதிய பாஜக தலைவர்கள் யார்.?

புதிய பாஜக தலைவர்கள் யார்.?

அடுத்ததாக மாநில தலைவரையும் அறிவிக்கவுள்ளது. பாஜகவை பொறுத்தவரை இரண்டு முறை மட்டுமே தலைவர் பொறுப்பில் இருக்க முடியும். அந்த வகையில் அண்ணாமலையின் முதல் கட்ட பதவி காலம் முடிவடையவுள்ளது. எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப்படுவார்களா.? அல்லது அண்ணாமலையே மீண்டும் மாநில தலைவராக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் பதவி இடங்களுக்கு கடும் போட்டியானது நிலவி வருகிறது. அதன் படி தமிழிசை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பேராசிரியர் சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

55
யாருக்கு வாய்ப்பு.?

யாருக்கு வாய்ப்பு.?

இதில் யாரை மாநில தலைவராக நியமிக்கலாம் என தேசிய மேலிடம் ஆலோசித்து வருகிறது. எந்த நேரத்திலும் புதிய தமிழக பாஜக தலைவர் பெயர் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றும் பட்சத்தில் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக அண்ணாமலை தேர்வு செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது. எனவே அரசியலில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் அந்த வகையில் தலைமையின் அறிவிப்பிற்காக பாஜகவின் மூத்த நிர்வாகிகள் காத்துள்ளனர். 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழிசை சௌந்தரராஜன்
வானதி சீனிவாசன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Recommended image2
Now Playing
விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
Recommended image3
Now Playing
புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved