தமிழக அரசு 9 நாட்கள் முடங்குகிறதா? அரசு ஊழியர்களுக்கு ஜாலிதான்!!
9 days Pongal Holidays in Tamil Nadu: பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறைகள் வருவது அரசுக்கு புதிய பிரச்சினையாக மாறியுள்ளது. அரசு ஊழியர்கள் பலர் 13ஆம் தேதி ஒருநாள் மட்டும் லீவு எடுத்தல் மொத்தம் ஒன்பது நாட்கள் அரசு இயந்திரம் முடங்கிவிடும் வாய்ப்பு உள்ளது.
TN CM MK Stalin
2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் தொடர் விடுமுறை நாட்கள் தமிழக அரசுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறைகள் வார நாட்களில் வருகிறது
ஜனவரி 14ஆம் தேதி செவ்வாக்கிழமை தை பொங்கல், ஜனவரி 15ஆம் தேதி புதன்கிழமை மாட்டுப் பொங்கல் (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 16ஆம் தேதி வியாழக்கிழமை காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Pongal Holidays
ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும்தான் வேலை நாள் உள்ளது. அன்றும் விடுமுறை எடுத்தால் அடுத்த சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடுகிறது. இதனால், சொந்த ஊருக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமையும் விடுமுறை கேட்டு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
Government employee request
இது தொடர்பாக அரசு ஊழியர்கள் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி 17ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்தால், 19ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை கிடைக்கும். வெளியூர் செல்லும் அரசு ஊழியர்கள் கூடுதலான சில நாள்கள் குடும்பத்தினருடன் செலவிட வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
Government offices
இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு மாற்றாக, ஜனவரி 25ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ந்து 9 நாள் விடுமுறை கிடைக்கும். அதாவது பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகைக்காக ஆண்டுதோறும் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டும் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
School Holidays
போகி பண்டிகைக்கு முன் ஜனவரி 11, 12ஆம் தேதிகள் சனி, ஞாயிறு வார விடுமுறை உள்ளது. இதனால், ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் லீவு கிடைத்தால், ஜனவரி 11 முதல் 19 வரை ஒன்பது நாள் பொங்கல் விடுமுறையாகக் கிடைக்கும். இதன்படி அரசு விடுமுறை அறிவித்தால், பள்ளி மாணவ மாணவிகளுக்கு குஷியான செய்தியாக இருக்கும். அரசு ஊழியர்களும் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடிவிட்டு 20ஆம் தேதி வேலைக்குத் திரும்ப வசதியாக இருக்கும்.
Problem for TN Govt
இந்தத் தொடர் விடுமுறை நாள்கள் காரணமாக அரசு ஊழியர்கள் பலர் விடுப்பில் சென்றுவிட்டால், பல அரசு அலுலவகங்கள் முழுமையாக செயல்பட முடியாத நிலை வரும். 9 நாட்களுக்கு அரசு இயந்திரமே இயங்க முடியாமல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பும் உள்ளது.