MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டாம்.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை

இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டாம்.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை

சென்னை மாநகரப் பேருந்துகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் பயணச்சீட்டு பெற்று பயணிக்கலாம். சிங்கார சென்னை பயண அட்டை எனப்படும் இந்த அட்டையைப் பயன்படுத்திப் பயணிகள் தடையற்ற மற்றும் பணமில்லாப் பயண அனுபவத்தைப் பெறலாம்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 06 2025, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
tamilnadu bus

tamilnadu bus

சென்னை பேருந்தில் ஸ்மார்ட் கார்டு

மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப அரசு பேருந்துகளில் வசதியும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிக்கெட் வாங்கவதற்காக நடத்துனரிடம் காத்திருக்க வேண்டிய நிலையானது தற்போது உள்ளது. மேலும் சரியான சில்லரை இல்லையென்றால் அவ்வளவுதான். இந்த பிரச்சனையெல்லாம் இல்லாமல் ஸ்மார்ட் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்து அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயிலில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது சென்னை மாநகர பேருந்துகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
chennail bus file

chennail bus file

சிங்கார சென்னை பயண அட்டை

சிங்கார சென்னை பயண அட்டையானது. பயணிகளுக்கு தடையற்ற மற்றும் பணமில்லா பரிவர்த்தனை பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தொலை நோக்கு திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வட்டையை பேருந்துகள், மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.  இந்த முயற்சியானது, தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் நவீனமயமாக்குவதற்கான தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகளில் ஒன்றாகும்.

35
bus strike in chennai

bus strike in chennai

இன்று முதல் ஸ்மார்ட் கார்டு அறிமுகம்

இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் சிங்கார சென்னை பயண அட்டை வாயிலாக பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (06.01.2025) மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

45
Chennai Bus

Chennai Bus

50ஆயிரம் ஸ்மார்ட் கார்டு இலவசம்

மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந்துகளிலும், ஏற்கனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில், ETM (Electronic Ticketing Machine) உபயோகத்தில் உள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 அட்டைகள் SBI மூலம் கட்டணமின்றி வழங்கப்படும்.

இவ்வட்டைகள் கோயம்பேடு. பிராட்வே. சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி திருவான்மியூர், செங்குன்றம், வேளச்சேரி, கிண்டி, ஆவடி, தியாகராயநகர், அம்பத்தூர் தொ.பே. அம்பத்தூர் அடையாறு. அய்யப்பன்தாங்கல், கிளாம்பாக்கம், வடபழனி, ஸ்ரீபெரும்புதூர், பெரம்பூர், சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்களில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்களின் வாயிலாக வழங்கப்படும். 
 

55

ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்

இவ்வாறு கட்டணமின்றி வழங்கப்படும் அட்டைகளை, ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைன் போர்ட்டல்கள், கைப்பேசி பயன்பாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்கள் போன்ற பல்வேறு வழிகளில் இந்த அட்டையை எளிதாக ரீசார்ஜ் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்துகளில் நடத்துநர்களிடமும் ரீசார்ஜ் செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
Recommended image2
Now Playing
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Recommended image3
Now Playing
"கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகமாக இருக்க தேவையில்லை" எதற்கும் தொய்வடைய வேண்டாம் - ஸ்டாலின் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved