MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.. முன்பணம் ரூ.50,000ஆக உயர்வு..!

அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.. முன்பணம் ரூ.50,000ஆக உயர்வு..!

அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில முன்பணம் தொகை குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 25 2023, 07:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்;- 13.06.1979ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் ரூ.1000ம், பல்தொழில்நுட்ப கல்வி பயில்வதற்கு ரூ.500ம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை உயர்த்தி முறையே ரூ.1000லிருந்து ரூ.1500ஆகவும், ரூ.500லிருந்து ரூ.750ஆகவும் 01.12.1988-ல் அரசாணை வெளியிடப்பட்டது. government

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இதன் தொடர்ச்சியாக 23.03.1993ல் மீண்டும் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டது. அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில் தொழில் முறை கல்வி ரூ.1,500லிருந்து ரூ.2,500, கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.1,500 லிருந்து ரூ.2000, பல்தொழில் நுட்ப கல்லூரி ரூ.750லிருந்து ரூ.1,000 ஆகவும், அரசாணை வெளியிடப்பட்டு முப்பதாண்டுகள் கடந்த நிலையில் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணத் தொகை கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தற்போது அரசு உயர்த்தி ஆணையிடப்படுகிறது.

34

இந்த உயர்த்தப்பட்ட கல்வி முன்பண தொகை 2023-24 கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்படும். 

* தொகுதி சி மற்றும் டி ஊழியர்களுக்கு, ஒரு மாத அடிப்படை ஊதியத்திற்கு சமமான தொகை அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும். 

*  தொகுதி ஏ மற்றும் பி அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியத்தில் 50% அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அந்த தொகை அனுமதிக்கப்படும். 

44

அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில் முந்தைய வரம்பு தற்போது உயர்த்தப்பட்ட வரம்பு தொழில் முறை கல்வி ரூ.2,500 லிருந்து ரூ.50,000, கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.2,000 லிருந்து ரூ.25,000, பல்தொழில்நுட்ப கல்லூரி ரூ.1,000 லிருந்து ரூ.25,000 தற்போது உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
Recommended image2
Now Playing
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Recommended image3
Now Playing
"கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகமாக இருக்க தேவையில்லை" எதற்கும் தொய்வடைய வேண்டாம் - ஸ்டாலின் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved