ஷாக் கொடுத்த சலூன் கடை.! இனி முடி வெட்ட, சேவிங்கிற்கு கட்டணம் இவ்வளவா.? வெளியான புதிய பட்டியல்
தமிழகத்தில் சலூன் கடைகளில் முடி வெட்டும் கட்டணம் உயர்ந்துள்ளது. ஜனவரி 1 முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன. முடி வெட்டுதல், சேவிங், பேஷியல் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
saloon shop
தமிழகத்தில் சலூன் கடைகள்
நாள் தோறும் மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் தங்களை அழகுபடுத்தி வருகிறார்கள். டிசைன் டிசைனாக முடியை திருத்தி வருகிறார்கள். மேலும் முக அழகுக்கு மெருகேற்ற பேஷியலும் செய்யப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல லட்சம் சலூன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் முடிவெட்ட, சேவிங் செய்ய ஒரே கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது.
Saloon shop
அதிரடியாக உயரும் கட்டணம்
தற்போது நாளுக்கு நாள் காய்கறி முதல் ஓட்டலில் உணவு விலை அதிகரித்து வரும் நிலையில், சலூனில் முடிவெட்டுவதற்கான கட்டணத்தை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் சலுன் கடைகளில் ஜனவரி 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவ சமூகம், முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்க புதிய கட்டணம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
kids hair cut
முடிவெட்ட, சேவிங் கட்டணம்
தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவ சமூகம், முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏசி இல்லாத முடித்திருத்தம் கடைகளில் முடி வெட்ட120 முதல் 130 ரூபாய் எனவும், சேவிங் செய்ய 60 முதல் 70 ரூபாய் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முடி வெட்ட மற்றும் சேவிங் இரண்டிற்கும் 180 முதல் 200 ரூபாய் வரையிலும், சிறுவர்களுக்கு முடிவெட்ட 100 முதல் 120 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
hair saloon
பேஸ் ப்ளீச்சிங் கட்டணம்
தாடி டிரிம் மற்றும் ஒதுக்குதலுக்கு 80 முதல் 100 ரூபாய் வரையிலும், தலை முடிக்கு டை அடிக்க 150 முதல் 200 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. பேசியல் செய்வதற்கு 300 முதல் 400 ரூபாய் வரையிலும், அடுத்ததாக தலை மசாஜ் செய்ய 150 முதல் 200 ரூபாய் எனவும், பேஸ் ப்ளீச்சிங் செய்ய 200 ரூபாய் முதல் 250 வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.