MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 2 நாட்கள் தொடர் விடுமுறை.! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

2 நாட்கள் தொடர் விடுமுறை.! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வார விடுமுறை மற்றும் விஷேச நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. சென்னை, கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 03 2025, 07:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
T nagar Crowed

T nagar Crowed

வெளியூர் பயணம்

வேலை தேடி பல லட்சம் பேர் தினந்தோறும் வெளியூர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் வந்தோரை வாழ வைக்கும் ஊராக சென்னை உள்ளது. இந்த நிலையில் உறவினர்கள், நண்பர்கள், சொந்த ஊர் என அனைத்தையும் விட்டு வந்தவர்களுக்கு விடுமுறை கிடைத்தால் உடனடியாக சொந்த ஊருக்கு புறப்படுவார்கள். அந்த வகையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விடுமுறை நாட்கள், விஷேச நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Chennai bus

Chennai bus

சிறப்பு பேருந்து அறிவிப்பு

அதன் படி, 03/01/2025 (வெள்ளிக்கிழமை), 04/01/2025 (சனிக்கிழமை), 05/01/2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
special bus

special bus

கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம்

இதன் படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு இன்று ( 03/01/2025 வெள்ளிக்கிழமை)  245 பேருந்துகளும், நாளை (04/01/2025 சனிக்கிழமை) 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை  (03/01/2025-04/01/2025) ஆகிய தேதிகளில் மொத்தம் 51 பேருந்துகளும்  இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

45
bus reservation

bus reservation

11ஆயிரம் பேர் முன்பதிவு

மேலும் மாதாவரத்திலிருந்து இன்றும் நாளையும் மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,892 பயணிகளும் சனிக்கிழமை 6,389 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 10,966 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

55

முன் பதிவு செய்து பயணியுங்கள்

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ளஇருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
விடுமுறைக்கால சிறப்பு பேருந்து
தமிழ்நாடு அரசு பேருந்து
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved