MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Southern Railway: தென் மாவட்ட பயணிகளுக்கு முக்கிய செய்தி! ரயில் சேவையில் மாற்றம்! இதோ முழு விவரம்!

Southern Railway: தென் மாவட்ட பயணிகளுக்கு முக்கிய செய்தி! ரயில் சேவையில் மாற்றம்! இதோ முழு விவரம்!

Southern Railway: தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 8 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Sep 19 2024, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Railway Department

Railway Department

இந்தியாவில் போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை விட ரயில் பயணத்தை அதிகம் பேர் விரும்புகின்றனர். இதனால் நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அனைத்து ரயில்களிலும் 3 மாதங்களுக்கு முன்பாகவே ரிசர்வேஷன் செய்யப்பட்டு விடுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Southern Railway

Southern Railway

வடமாநிலங்கள், தென் மாநிலங்கள் என அனைத்துப் பகுதி மக்களும் ரயில் சேவையை அதிகளவு பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் எப்போதும் நிரம்பியே காணப்படுகின்றன. இந்நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்புக்காக அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணிகள்  தமிழகம் அவ்வப்போது நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மதுரை, திண்டுக்கல், சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் ரயில் சேவையில் செப்டம்பர் 18ம் அதாவது நேற்று முதல் அக்டோபர் 8ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

36
Madurai

Madurai

பகுதியாக ரத்து 
 
ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை (செப்டம்பர் 24, அக்டோபர் 1 தவிர)  திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். திண்டுக்கல் - செங்கோட்டை சேவை ரத்து செய்யப்பட்டிருக்கும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயில் செப்டம்பர் 19-ம் தேதி முதல்  அக்டோபர் 8-ம் தேதி வரை (செப்டம்பர் 24, அக்டோபர் 2 தவிர) திண்டுக்கல்லிலிருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும். 

46
Train operation alternative route

Train operation alternative route

மாற்றுப் பாதையில் ரயில் இயக்கம்
 
செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 7 வரை (செப்டம்பர்  25, அக்டோபர் 2 தவிர) கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மணப்பாறை வழியே செல்வதற்கு பதிலாக, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும். குருவாயூரிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர் - சென்னை விரைவு ரயில் செப்டம்பர் 23, 25, 26, 27, அக்மோபர் 2, 3 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும். 

56
Nagercoil - Kacheguda Express Train

Nagercoil - Kacheguda Express Train

நாகர்கோவில் - கச்சேகுடா விரைவு ரயில்
 
நாகர்கோவிலிலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில் - கச்சேகுடா விரைவு ரயில்  செப்டம்பர் 28-ம் தேதி திண்டுக்கல், கரூர் வழியே இயக்கப்படும்.  மதுரையிலிருந்து காலை 11.55 மணிக்குப் புறப்படும் மதுரை- பிகானிர் விரைவு ரயில் செப்டம்பர் 26, அக்டோபர் 3 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும்

66
Nagercoil-Mumbai Express train

Nagercoil-Mumbai Express train

நாகர்கோவில்- மும்பை விரைவு ரயில் 
 
நாகர்கோவிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில்- மும்பை விரைவு ரயில் செப்டம்பர் 26, அக்டோபர் 3 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரியிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி- ஹவுரா அதிவிரைவு ரயில்  செப்டம்பர் 28-ம் தேதியும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தென்னக இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
Recommended image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image3
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved