MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி இந்த ரயில்கள் எழும்பூரில் இருந்து புறப்படாது!

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி இந்த ரயில்கள் எழும்பூரில் இருந்து புறப்படாது!

Southern Railway: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் நடைபெற்று வரும் 4-ம் கட்ட சீரமைப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 05 2026, 08:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : our own

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம், எந்த வித அசதியும் இல்லாமல் தூக்கிக்கொண்டடே செல்லலாமல் என்பதால் பேருந்து சேவவையை விட அதிகளவில் ரயில் சேவையை பயணிகள் விரும்புகின்றனர். இதனால் நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையால் பயனடைந்து வருகின்றனர்.

26
Image Credit : our own

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவ்வப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள், மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதும், பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதும் வழக்கம். இதுகுறித்து முன்கூட்டியே ரயில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்படும். இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
100 டிகிரியில் மண்டையை பொளந்த வெயில்.. மாலையில் குளு குளு கோடை மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்
Related image2
School Reopening: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது? என்ன காரணம் தெரியுமா?
36
Image Credit : Google

அதாவது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் நடைபெற்று வரும் 4-ம் கட்ட சீரமைப்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, ரயில் சேவைகளின் இயக்க முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடைமேடைகளில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை முதல் 21ம் தேதி வரை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

46
Image Credit : our own

சென்னை எழும்பூர் - செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ்' ரயில், 2026 ஏப்ரல் 07 முதல் ஏப்ரல் 22 வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். தாம்பரத்திலிருந்து புறப்படும். மேலும் இந்த ரயிலானது தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 08:05 மணிக்கு புறப்படும்.

56
Image Credit : our own

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 7ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த ரயிலானது தாம்பரத்தில் இருந்து இரவு 09:05 மணிக்கு புறப்படும்.

66
Image Credit : our own

நெல்லை- சென்னை எழும்பூர் வரை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் வரும் 21ம் தேதி வரை காலை 6.25 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் வந்தடைந்து அங்கு நிறுத்தப்படும். தாம்பரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் இந்த ரயிலானது நாளை முதல் மறு அறிவிப்பு வரும் இந்த ரயில் சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். பீச் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 06:20 மணிக்கு இந்த ரயில் புறப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தென்னக இரயில்வே
ரயில்
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
இந்த தேர்தலில் விஜய்...உறுதியாக மறைந்த விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார் ! TTV தினகரன் பேட்டி
Recommended image2
TASMAC Holiday: டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு
Recommended image3
Now Playing
இந்த தேர்தல் தமிழ்நாடு அணி vs டெல்லி அணிக்கு இடையே தான் போட்டி ! அன்பில் மகேஷ் பேட்டி
Related Stories
Recommended image1
100 டிகிரியில் மண்டையை பொளந்த வெயில்.. மாலையில் குளு குளு கோடை மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்
Recommended image2
School Reopening: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது? என்ன காரணம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved