நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! குஷியில் பள்ளி மாணவர்கள்!
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாளைபள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School Student
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே சொல்ல முடியாத அளவுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக சனி மற்றும் ஞாயிறு விடுமுறையோடு சேர்ந்து கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது விடுமுறை கிடைத்ததால் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
School Leave
மேலும் அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் பள்ளி மாணவர்கள் கிடைத்து. இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! அடுத்த 12 நாட்கள் லீவே இல்லை! தொடர்ந்து ஸ்கூல் தான்!
Vaikunta Ekadasi
இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செம ஹேப்பியில் பள்ளி மாணவர்கள்! இந்த மாவட்டங்களுக்கு 8 நாட்கள் பொங்கல் விடுமுறை!
School Holiday
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு! முக்கிய செய்தியை வெளியிட்ட அரசு தேர்வுகள் இயக்ககம்!
School Working Day
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் செயல்படும்.
இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.