- Home
- Tamil Nadu News
- கனமழை எதிரொலி.. மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு விடுமுறை..! லிஸ்டில் உங்க ஊரும் இருக்கா..?
கனமழை எதிரொலி.. மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு விடுமுறை..! லிஸ்டில் உங்க ஊரும் இருக்கா..?
Schools Holiday: தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், தென்தமிழகத்தில் மாவட்ட வாரியாக பரவலாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கும் பருவமழை
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குவதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழையை முன்னிட்டு சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அரசு அதிரடி உத்தரவு
மேலும் மழை காலங்களில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் முயற்சியாக சென்னையில் 15ம் தேதி முதல் சாலை அமைத்தல், பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் வெளுத்து வாங்கும் கனமழை
இதனிடையே தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உ்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான காயல்பட்டினம், ஆலந்தலை, தளவாய்புரம், பரமன்குறிச்சி ஆகிய பகுதிகளில் சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்கிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
இதே போன்று நெல்லையின் பாளையங்கோட்டை, பேட்டை, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.