MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொதுமக்களே குடையில்லாமல் வெளியே போகாதீங்க! தமிழகத்தில் மட்டுமல்ல சென்னையிலும் மழை வெளுத்து வாங்கப்போகுதாம்!

பொதுமக்களே குடையில்லாமல் வெளியே போகாதீங்க! தமிழகத்தில் மட்டுமல்ல சென்னையிலும் மழை வெளுத்து வாங்கப்போகுதாம்!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், சென்னை, வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 12 2025, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TN Heavy Rain

TN Heavy Rain

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலை பார்க்கும் போது கோடைக்காலம் தொடங்கிவிட்டதோ என பொதுமக்கள் நினைக்கும் அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வந்தது. குறிப்பாக தலைநகர் சென்னையிலும் கடுமையான வெயில் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை, வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் மழை இருக்கா? இல்லையா? என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

25
tamilnadu weather update

tamilnadu weather update

தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க: சென்னை முதல் வேலூர் வரை இன்று தரமான சம்பவம் இருக்காம்! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்!

35
Tamilnadu rain

Tamilnadu rain

நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

45
weather forecast

weather forecast

மார்ச் 13ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 14 முதல் 16ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 17ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இதையும் படிங்க:  தமிழகத்தில் இன்று எந்ததெந்த மாவட்டங்களில் மிக கனமழை! தூத்துக்குடி கலெக்டர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

55
Chennai weather

Chennai weather

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான - மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான - மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.5,000 சம்பளம் உயர்வு! யாருக்கெல்லாம்? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
Recommended image2
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
Recommended image3
இன்றும் தரமான சம்பவம் இருக்காம்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved