Heavy Rain in Southern District: தென் மாவட்டங்களில் மீண்டும் மிரட்டப்போகுதா மழை? பகீர் கிளப்பும் வானிலை மையம்!
Heavy Rain in Southern District: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுரையில் நேற்று பெய்த கனமழையால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தென் மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை அவ்வப்போது வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதுவும் காலை நேரத்தில் வெயில் இருந்தாலும் மாலை, இரவு வேளையில் மழை பெய்து வருகிறது. நேற்று மதுரை நகரில் மதியம் 3 முதல் 3.15 மணிக்குள் 45 மி.மீ. மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியதால் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. மாலை நேரம் என்பதால் பள்ளிக் குழந்தைகள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்நிலையில் தென் மாவட்டங்களான மதுரை உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மழை மிரட்டுமா? என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: TNPSC Group 4 Exam Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!
27 முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் 31 முதல் 01ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: School Holiday: ஹேப்பி நியூஸ்! நவம்பர் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.