- Home
- Tamil Nadu News
- மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க போகும் கனமழை! இந்த முறை எந்தெந்த மாவட்டங்களில் சம்பவம் இருக்கு தெரியுமா?
மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க போகும் கனமழை! இந்த முறை எந்தெந்த மாவட்டங்களில் சம்பவம் இருக்கு தெரியுமா?
தமிழகத்தில் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட சேதத்திலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், வரும் 10ம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Heavy Rain
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணா வகையில் மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்பத்திவிட்டு சென்றது. இதனால், பொதுமக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் 10ம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்து எந்ததெந்த மாவட்டங்களில் சம்பவம் செய்யப்போகுது என்ற விவரத்தையும் தெரிவித்துள்ளது.
Chennai Meteorological Department
அதில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புதிய சாதனை! டாஸ்மாக் வருமானத்தை ஓவர்டேக் செய்ததா பதிவுத்துறை? எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?
Tamilnadu Heavy Rain
இதன் காரணமாக 08 மற்றும் 09ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், 10ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Tamilnadu Rain News
11ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: Pongal Gift: பொங்கலுக்கு ரூ.2,000 கொடுக்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
TN Heavy Rain
12ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: School Teacher: ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ரூல்ஸ்! இனி விடுமுறை எடுக்க புதிய கட்டுப்பாடுகள்!
Heavy Rain Alert
13ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது.