MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்!

TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்!

TN Rain Aert : தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தில் இருந்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : May 27 2026, 07:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
11 மாவட்டங்களில் கனமழை
Image Credit : Getty

11 மாவட்டங்களில் கனமழை

தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வானிலையில் திடீர் மாற்றம் உருவாகியுள்ளது. வெப்பம் அதிகரிக்கும் சூழலிலும், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மழை மற்றும் வெப்பம் இணைந்த வானிலை நிலை உருவாகும் சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வானிலை மையம் அலர்ட்
Image Credit : our own

வானிலை மையம் அலர்ட்

வானிலை ஆய்வு நிபுணர்கள் கூறுவதன்படி, வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் மேலடுக்கு சுழற்சி தொடர்வதால், தமிழகத்தில் மேகமூட்டம் மற்றும் மழைச் செயல்பாடுகள் அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Now Playing
TVK-வுக்கு திருமா கொடுத்த அட்வைஸ்! "விஜய் இதில் உஷாரா இருக்கணும்..
Related image2
Jothimani Vs TVK Vijay: விஜய் எல்லாத்துக்கும் உங்களுக்கு ஆதரிக்க முடியாது.. பாஜக வழியில் தவெக.. கொதிக்கும் ஜோதிமணி!
35
வானிலை அப்டேட்
Image Credit : our own

வானிலை அப்டேட்

செவ்வாய்க்கிழமை பதிவான வெப்பநிலை கணக்குகளில் வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை பதிவு செய்தது. சமவெளி பகுதிகளில் தர்மபுரி குறைந்தபட்சமாக 23 டிகிரி, மலைப்பகுதிகளில் உதகமண்டலம் 13.2 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. வெப்பநிலை உயர்ந்திருந்தாலும், வளிமண்டல மாற்றங்கள் காரணமாக மழை வாய்ப்பு உருவாகியுள்ளதாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.

45
சென்னையில் வானிலை
Image Credit : our own

சென்னையில் வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மேகமூட்டமான வானிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையிடையே காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பமும் ஈரப்பதமும் கலந்த வானிலை நிலை நீடிக்கலாம்.

55
இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்
Image Credit : our own

இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களாக நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் தனித்தனியாக சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
வானிலை
மழை செய்திகள்
சென்னை
தமிழ்நாடு மழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai 2.0 : நியூயார்க் நகருக்கு இணையாக மாறப்போகும் சென்னை! - CM விஜய்யின் மாஸ்டர் பிளான்
Recommended image2
Now Playing
"சமூக ஊடக கவர்ச்சி முடிவுக்கு வரும்..." - ஆட்சி குறித்து மேடையில் பேசிய DMK தலைவர் MK Stalin!
Recommended image3
Now Playing
"என் சிரிப்பை மீட்டுத் தந்தவர் மு.க.ஸ்டாலின்!" OPS அதிரடி பேச்சு!
Related Stories
Recommended image1
Now Playing
TVK-வுக்கு திருமா கொடுத்த அட்வைஸ்! "விஜய் இதில் உஷாரா இருக்கணும்..
Recommended image2
Jothimani Vs TVK Vijay: விஜய் எல்லாத்துக்கும் உங்களுக்கு ஆதரிக்க முடியாது.. பாஜக வழியில் தவெக.. கொதிக்கும் ஜோதிமணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved