MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Weather Update: சூரியனின் கோரமுகத்திற்கு எண்ட் கார்டு! வெளுக்கப்போகும் கனமழை! குளு குளு வானிலை அப்டேட்!

TN Weather Update: சூரியனின் கோரமுகத்திற்கு எண்ட் கார்டு! வெளுக்கப்போகும் கனமழை! குளு குளு வானிலை அப்டேட்!

TN Weather Update: தமிழகத்தில் கோடை வெயிலுக்கு விடை கொடுக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : May 22 2026, 08:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் மழை பெய்யும்
Image Credit : Asianet News

தமிழகத்தில் மழை பெய்யும்

தமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. சில இடங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டுகிறது. இடையில் சில மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்து வெப்பம் தணிந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் சூரியன் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. தலைநகர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனல் தகிக்கிறது. இந்த நிலையில், அனலில் வாடும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எந்தெந்த மாவட்டங்களில் மழை?
Image Credit : our own

எந்தெந்த மாவட்டங்களில் மழை?

அதாவது 22ம் தேதியான இன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23ம் தேதியான நாளை நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Articles

Related image1
Heavy Rain: பகலில் வெயில்! மாலையில் மழை! கோவை உட்பட 12 மாவட்டங்களுக்கு.. வானிலை மையம் கொடுத்த கூல் அப்டேட்!
Related image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
34
கோவை, நீலகிரி
Image Credit : Asianet News

கோவை, நீலகிரி

24ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர். திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

25ம் தேதி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். 26ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

44
சென்னையில் எப்படி?
Image Credit : ANI

சென்னையில் எப்படி?

அதே வேளையில் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆயவு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். மாலை / இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வானிலை
மழை செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Onion : வெறும் 35 ரூபாய்க்கு வெங்காயம்! மிஸ் பண்ணிடாதீங்க! உடனே கிளம்புங்க, வாங்கிட்டு வரலாம்!
Recommended image2
Now Playing
கச்சத்தீவு போனதற்கு காரணம் திமுக தான் - சபாநாயகரின் கண்டனத்திற்கு ஆளான நிர்மல் குமார் பேச்சு!
Recommended image3
Now Playing
தேர்தல் தோல்வி பயமா? - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம் !
Related Stories
Recommended image1
Heavy Rain: பகலில் வெயில்! மாலையில் மழை! கோவை உட்பட 12 மாவட்டங்களுக்கு.. வானிலை மையம் கொடுத்த கூல் அப்டேட்!
Recommended image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved