தக்காளி, இஞ்சி விலை மீண்டும் கூடியதா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக காய்கறி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
Vegetables
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேட்டில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாயும், நெல்லிக்காய் ஒரு கிலோ 89 ரூபாயும், வாழைப் பூ ஒரு கிலோ 25 ரூபாயும், குடைமிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
முட்டைக்கோஸ் விலை என்ன.?
பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாயும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாயும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாயும், அவரைக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தக்காளி விலை என்ன.?
பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பச்சை கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இஞ்சி விலையானது தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது அந்த வகையில் இஞ்சியும் தரத்தை பொறுத்து ஒரு கிலோ இஞ்சி 150 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகிறது.தக்காளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது