Vegetables Price : தக்காளி,வெங்காயம், இஞ்சி விலை என்ன.? கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கூடியதா.? குறைந்ததா.?
உற்பத்தி குறைவு மற்றும் விஷேச நாட்கள் காரணமாக கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்தது. இந்தநிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து சற்று அதகரித்துள்ளதால் விற்பனை விலையானது குறைந்து வருகிறது.
சின்ன வெங்காயம் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 65க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Cylinder Price : குட் நியூஸ்.. சமையல் எரிவாயு விலை குறைந்தது..! எவ்வளவு தெரியுமா.?
Vegetables Price Koyembedu
அவரைக்காய் விலை என்ன.?
குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Vegetables Price Today
முருங்கைக்காய் விலை என்ன.?
கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
முள்ளங்கி விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.