பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 10,000 கொடுக்கும் தமிழக அரசு!
தமிழ் வளர்ச்சித் துறை 11, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துகிறது. மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடைபெறும். மொத்த பரிசுத் தொகை அறிவிப்பு.
Tamil Development Department
தமிழ் வளர்ச்சித் துறையின் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு அப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெற்று வருகின்றனர்.
School Student
சென்னை மாவட்டத்தில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 21ம் தேதியன்று அண்ணாசாலை, மதராசா ஐ ஆசாம் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கி நடைபெறும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசு பாராட்டுச் சான்றிதழும் பின்வருமாறு வழங்கப்படும்.
School Student Competition
மாவட்டப்போட்டி பரிசுத் தொகை விவரம் (பள்ளி)
கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டி , பேச்சுப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
College Student
கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 22ம் தேதியன்று அண்ணாசாலை, காயிதே மில்லத் அரசு மகளில் கல்லூரியில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசு பாராட்டுச் சான்றிதழும் பின்வருமாறு வழங்கப்படும்.
College Student Competition
மாவட்டப்போட்டி பரிசுத் தொகை விவரம் (கல்லூரி)
கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டி , பேச்சுப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மாவட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவில் ஜனவரி 28ம் தேதியன்று 11,12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், ஜனவரி 28ம் தேதியன்று கல்லூரி மாணவர்களுக்கும் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெறுவர். மாநிலப் போட்டிக்குரிய பரிசுத் தொகை விவரம் பின்வருமாறு.
Prize money
மாநிலப்போட்டி பரிசுத் தொகை விவரம் (பள்ளி / கல்லூரி)
கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 15,000, இரண்டாம் பரிசு 12,000, மூன்றாம் பரிசு 10,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநிலப் போட்டிகளுக்குரிய மொத்தப் பரிசுத் தொகை ரூ. 52,38,000 வழங்கப்படும்.