- Home
- Tamil Nadu News
- வேலை இல்லாத இளைஞர்களுக்கு சூப்பர் நியூஸ்! செலவுக்கு பணம் கொடுக்கும் அரசு! எவ்வளவு தெரியுமா?
வேலை இல்லாத இளைஞர்களுக்கு சூப்பர் நியூஸ்! செலவுக்கு பணம் கொடுக்கும் அரசு! எவ்வளவு தெரியுமா?
Unemployment youth: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை. கல்வித் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

வேலை இல்லாத இளைஞர்கள்
தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அசத்தலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் படித்து முடித்து வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வேலை இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு உதவித்தொகை
நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைக்காக காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 600 ரூபாய் என ஆண்டுக்கு 7200 ரூபாய் வழங்கப்படுகிறது.
குடும்ப ஆண்டு வருமானம்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர்/பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்புவரை படித்தவர்களுக்கு மாதம் 600 ரூபாய், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 750 ரூபாய், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 1000 ரூபாயும் உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பதிவுசெய்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமானம் வரம்பு ஏதுமில்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருக்க கூடாது. அப்படி தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை https://tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பயன்படுத்துமாறு அரசு விதிமுறைகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை நகல்
விண்ணப்பப்படிவத்தில் அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்கள் ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை அலுவலக வேலைநாளில் விண்ணப்பத்தினை நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மேலும் உதவித் தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

