MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இன்று முதல் 199 ரூபாய்க்கு 14 மளிகை பொருட்கள்.! மிஸ் பண்ணிடாதீங்க- வெளியான அசத்தல் அறிவிப்பு

இன்று முதல் 199 ரூபாய்க்கு 14 மளிகை பொருட்கள்.! மிஸ் பண்ணிடாதீங்க- வெளியான அசத்தல் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு மக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் 199 மற்றும் 299 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படும்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Oct 30 2024, 11:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
diwali crackers

diwali crackers

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். அந்த வகையில் தமிழகம் முழுவதும் மட்டுமல்ல நாடே தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் புத்தாடைகள் வாங்குவதில் இருந்து பட்டாசுகள், இனிப்புகள் என மக்கள் கடைகளில் குவிந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தீபாவளி கொண்டாட்டத்தை மக்கள் உற்சாகமாக கொண்டாட தமிழக அரசு சார்பாக தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. இந்த நிலைநில் மளிகை பொருட்களை குறைவான விலையில் மக்களுக்கு கிடைக்கவும் உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. .

25
ration shop

ration shop

மலிவான விலையில் மளிகை பொருட்கள்

ஏற்கனவே 499 ரூபாய்க்கு 15 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் அமல் படுத்தப்பட்டது. இந்தநிலையில் இதை விட குறைவான விலையில் மக்களுக்கு சமையல் பொருட்கள் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து வெளி சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே சமையல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

 "கூட்டுறவு கொண்டாட்டம்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.  இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பானது,  பிரீமியம் (Premium) மற்றும் எலைட் (Elite) என இரண்டு வகையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் பீரிமியம் எலைட் பிரிவில் 199 மற்றும் 299 என்ற அளவில் விற்பனை செய்யப்படவுள்ளது. 

35

கூட்டுறவு கொண்டாட்டம்

பிரீமியம் (Premium) தொகுப்பில் துவரம்பருப்பு-200கிராம், உளுத்தம்பருப்பு-200கிராம், நீட்டு மிளகாய்-100கிராம். தனியா-100கிராம். புளி-100கிராம், ரவை-100கிராம், ஏலக்காய்-5கிராம், கடலைபருப்பு-200கிராம், வறுகடலை (குண்டு) -100கிராம், மிளகு-25கிராம். சீரகம்-25கிராம், வெந்தயம்-50கிராம். கடுகு- 50கிராம், சோம்பு-50கிராம்.  என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு 199 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், எலைட் (Ellte) தொகுப்பில் துவரம்பருப்பு-250கிராம், உளுத்தம்பருப்பு-250கிராம். கடலைபருப்பு-250கிராம், சோம்பு-50கிராம். நீட்டு மிளகாய்-250கிராம். தனியா- 200கிராம், புளி-100கிராம், ரவை-100கிராம், ஏலக்காய்-5கிராம், வறுகடலை (குண்டு)-200கிராம், மிளகு-50கிராம், சீரகம்-50கிராம். வெந்தயம்-50கிராம், கடுகு-50கிராம். என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு 299 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
 

45

அதிரசம் முறுக்கு கோம்போ

இது மட்டுமில்லாமல் தீபாவளி பண்டிகையில் முக்கியத்துவம் பிடிப்பது இனிப்பு வகைகளாகும், உறவினர்கள், நண்பர்களுக்கு தீபாவளி பண்டிகை நாட்களில் இனிப்புகளை வழங்கி பரிமாறிக்கொள்வார்கள். அந்த வகையில் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையில் "அதிரசம்-முறுக்கு காம்போ" என்ற விற்பனை தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 

55

எங்கே கிடைக்கும்.?

இந்த "அதிரசம்-முறுக்கு காம்போ" தொகுப்பில் பச்சரிசி மாவு- 500கிராம். பாகு வெல்லம்-500கிராம், ஏலக்காய்-5கிராம். மைதா மாவு- 500கிராம். Sunland/Goldwinner Sunflower Oil -1/2லிட்டர் என 5 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த தீபாவளி சிறப்பு தொகுப்பானது  கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் "கூட்டுறவு கொண்டாட்டம்" என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை இன்று ( 28.10.2024) முதல் நடைபெறவுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
ரேஷன் கடை
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெயிலின் ஆட்டம் ஆரம்பிச்சுடுச்சு! இனிமே குடை இல்லாமல் வெளியே போவாதீங்க! மழை குறித்து எதிர்பாராத ட்விஸ்ட்
Recommended image2
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Recommended image3
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved