ஆசிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அறிவிப்பு .! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் பணிக்கான விண்ணப்ப தேதியை நீட்டித்துள்ளது. மார்ச் 18 வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களுக்கு கல்வி தான் முக்கிய அடித்தளமாக அமைகிறது. எனவே மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஆசிரியர்களின் பங்கு முக்கியம். அந்த வகையில் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வுகள் நடத்தப்படும்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஆசிரியர்கள் தேர்வு வாரியம்
அதில், மாநில தகுதித் தேர்வினை வருகின்ற மார்ச் மாதம் 6,7.8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி (CBT) வாயிலாக நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என உயர்கல்வித் துறை தெரிவித்திருந்தது.
சட்டக்கல்லூரி உதவிப்பேராசிரியர்கள்
இந்த நிலையில் இதே போல மற்றொரு தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி அரசு சட்டக்கல்லூரி இணை பேராசிரியர்கள் மற்றும் உதவிப்பேராசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் தேர்வு தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர். உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01 / 2025, நாள். 24.01.2025 வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு
இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.