- Home
- Tamil Nadu News
- ஊழியர்கள்- தமிழக அரசு பேச்சுவார்த்தை வெற்றியா.? தோல்வியா.? ஜாக்டோ ஜியோ எடுத்த முக்கிய முடிவு என்ன.?
ஊழியர்கள்- தமிழக அரசு பேச்சுவார்த்தை வெற்றியா.? தோல்வியா.? ஜாக்டோ ஜியோ எடுத்த முக்கிய முடிவு என்ன.?
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு கால அவகாசம் கேட்டதால், திட்டமிட்டபடி தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

ஊழியர்கள்- தமிழக அரசு பேச்சுவார்த்தை வெற்றியா.? தோல்வியா.?
அரசுக்கும் - ஊழியர்களுக்கும் பாலமாக இருப்பது அரசு ஊழியர்கள் தான். அரசின் திட்டங்களை கடைநிலை மக்களுக்குங கொண்டு செல்ல முக்கிய பங்கு வகிக்கின்றனர். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக பல கட்ட போராட்டங்களையும் நடத்தினர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர் தற்செயல் விடுப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டனர்.
முதலமைச்சர் கையில் முடிவு
இதனால் தமிழக அரசு அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர்கள் குழுவை அமைத்தது. அந்த குழுவோடு நேற்று தலைமைசெயலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது.
இறுதியாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாலையில் முடிவு அறிவிப்பதாக அமைச்சர்கள் குழு தெரிவித்தது. இதனை தொடர்ந்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறுகையில்,
கால அவகாசம் கேட்ட தமிழக அரசு
அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் அமைச்சர் அமைத்த குழுவோடு பேச்சுவார்த்தை நேற்று காலையில் நடைபெற்றது. அதில் எங்கள் கோரிக்கை குறித்து பேசினார்கள். இதனையடுத்து முதலமைச்சரோடு கலந்து பேசி இரவில் முடிவு சொல்வதாக கூறப்பட்டது.
இதனையடுத்து அரசு ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து முடிவெடுக்க அரசு 4 வார கால அவகாசம் வேண்டும் என அரசு சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. எனவே போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
தமிழகம் முழுவதும் இன்று போராட்டம்
இதனையடுத்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் இனியும் கால அவகாசம் தர இயலாது என முடிவெடுக்கப்பட்டு திட்டமிட்டப்படி தற்செயல் விடுப்பு போராட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். மேலும் எங்களது கோரிக்கைகள் நிராகரிக்கவில்லை, அவகாசம் தான் கேட்டுள்ளனர்.
எனவே மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஒருங்கிணைப்பாளர்கள் கூடி முடிவ எடுப்போம் என தெரிவித்தார். எனவே தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உடனடியாக தீர்வு கிடைக்காத காரணத்தால் போராட்டம் இன்று நடைபெறவுள்ளது.