MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நகைபிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம்; அடேங்கப்பா! ஒரே நாளில் இவ்வளவு விலை உயர்வா?

நகைபிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம்; அடேங்கப்பா! ஒரே நாளில் இவ்வளவு விலை உயர்வா?

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.7,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

2 Min read
Author : Rayar r
| Updated : Dec 21 2024, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
GOLD RATE

GOLD RATE

இந்தியாவில் தங்கம் மிகவும் ஆடம்பரமான பொருளாக உள்ளது. இந்திய மக்கள் தங்க நகை மீது அதிகளவு ஈர்ப்பு கொண்டுள்ளதாலும், தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கம் விற்பனை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Today Gold Rate

Today Gold Rate

தங்கத்தின் விலை 

தங்கத்தின் விலை மிகவும் உச்சத்துக்கு செல்லும் என்பதால் இப்போதே  பலரும் அதிகளவு தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது.  கடந்த 2010ம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அடுத்த 14 ஆண்டுகளில் தங்கத்தின் விலை பெரும் உச்சத்தை தொட்டுள்ளது.

அதாவது கடந்த அக்டோபர் மாதம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.59,640 என்ற நிலையை அடைந்தது. அதன்பிறகு 4 ஆயிரம் ரூபாய் வரை குறைந்து பெண்களுக்கு நிம்மதியை அளித்தது. இதன்பிறகு கடந்த மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

UPI மோசடிகளை தடுக்க உதவும் பாரத்பே 'ஷீல்டு; எப்படி ஆக்டிவேட் செய்வது?

 

34
Gold Rate Price Hike

Gold Rate Price Hike

அதிரடி விலை உயர்வு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,800 க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.99க்கு விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320க்கு விற்பனையான தங்கம் இன்று விலை அதிகரித்து இருப்பது பெண்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

44
Gold Rate in Chennai

Gold Rate in Chennai

அடுத்த சில தினங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.  இது நகைபிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கிரெடிட் கார்டு கடனைத் தவிர்ப்பது எப்படி? கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள் இதோ!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தங்கம்
தங்க விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
Recommended image2
Now Playing
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Recommended image3
Now Playing
"கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகமாக இருக்க தேவையில்லை" எதற்கும் தொய்வடைய வேண்டாம் - ஸ்டாலின் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved