- Home
- Tamil Nadu News
- கோவில் நகரத்தில் அதிர்ச்சி! பெண்களை கூட்டு பலாத்காரம் செய்து விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்! வௌியான பகீர் தகவல்
கோவில் நகரத்தில் அதிர்ச்சி! பெண்களை கூட்டு பலாத்காரம் செய்து விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்! வௌியான பகீர் தகவல்
இன்ஸ்டாகிராமில் தொடங்கிய காதல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டலில் முடிந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் நகரத்தில் அதிர்ச்சி! பெண்களை கூட்டு பலாத்காரம் செய்து விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்! வௌியான பகீர் தகவல்
திருவண்ணாமலை நாவக்கரை பகுதியைச் சேர்ந்த ருத்வேந்திரன் (26) வேன் டிரைவர். இவர் இன்ஸ்டாகிராமில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தண்டராம்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
Rape
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி நேரில் சந்திக்க வேண்டும் என இளம்பெண்ணை அழைத்த ருத்வேந்திரன் திருவண்ணாமலை நாவக்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் அவரது நண்பரான தனுஷ் (20) என்பவருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
women arrest
அப்படி இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட பெண் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 9-ம் தேதி ருத்வேந்திரன், தனுஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
porn video 1
மேலும் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் ஆபாச படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அடிக்கடி அவர்கள் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண் குறித்து காவல்துறை தொடர் விசாரணை நடத்தினர். அதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள போத்துவா கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற இளம்பெண் வாலிபர்களுக்கு இளம்பெண்களின் செல்போன் நம்பர்களை வழங்கி வந்தது தெரியவந்தது. விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
women arrest
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தியதில் பல இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து இந்த சம்பவத்தில் தொடர்பாக வேறு யாராவது உள்ளனரா என தீவிர விசாரணை மேற்கொண்ட போது ஏற்கனவே இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய சவுந்தர்யாவை காவல்துறையினர் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மொத்தமாக 7 பேரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இதில், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.