- Home
- Tamil Nadu News
- அடேங்கப்பா இத்தனை நாட்களா? கோடைக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகளுக்கு கொத்தாக வரும் விடுமுறை
அடேங்கப்பா இத்தனை நாட்களா? கோடைக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகளுக்கு கொத்தாக வரும் விடுமுறை
தமிழகத்தில் கோடை விடுமுறை விரைவில் நிறைவு பெறவுள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு பின்னர் வரக்கூடிய பொதுவிடுமுறைகளின் தொகுப்பை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

Holiday List
தமிழகம் முழுவதும் 2024 - 2025ம் கல்வியாண்டு நிறைவு பெற்று கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையானது வருகின்ற ஜூன் 1ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 2ம் தேதி தமிழகம் முழுவதும் 2025 - 26ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கடப்பட உள்ளன.
Summer Holiday
நீட்டிக்கப்படும் கோடை விடுமுறை
நடப்பு ஆண்டில் கோடை வெயிலானது தொடக்கத்தில் சற்று உக்கிரமாக இருந்தாலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வபோது மழை பெய்ததால் கோடை சற்று இயல்பாக கடந்து செல்கிறது. இறுப்பினும், வரும் சில நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவது தொடர்பாக இறுதியில் ஆலோசிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
Schools Holiday
பள்ளி, கல்லூரி விடுமுறை
இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின்னர் வரக்கூடிய பொது விடுமுறையை அறிந்து கொள்வது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. அதன்படி பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே பக்ரித் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. ஜூன் 7ம் தேதி பக்ரித் பண்டிகை என்பதால் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Schools and Colleges Holiday
கோடைக்கு பின்னரான விடுமுறை தினங்கள்
இதே போன்று ஜூலை மாதம் 6ம் தேதி மொஹரம் பண்டிகையும், ஆகஸ்ட் மாதம் 15, 16, 27ம் தேதிகள் முறையே சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுவதால் 3 நாட்கள் விடுமுறை வருகிறது. மேலும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி மிலாது நபி பண்டிகைக்காகவும், அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆயுத பூஜையும், 2ம் தேதி விஜயதசமியும், 20ம் தேதி தீபாவளி பண்டிகைக்காகவும் விடுமுறை வருகிறது. இதன் தொடர்ச்சியாக டிசம்பர் மாதத்தில் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை வருகிறது.