- Home
- Tamil Nadu News
- ‘27’ தேதியில் விஜயின் அரசியல் பவர்… விக்கிரவாண்டி முதல் செங்கோட்டையன் வரை.. இதுதெரியாம போச்சே!
‘27’ தேதியில் விஜயின் அரசியல் பவர்… விக்கிரவாண்டி முதல் செங்கோட்டையன் வரை.. இதுதெரியாம போச்சே!
தமிழக அரசியலில் “27” என்ற தேதி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே கூறலாம். அது என்ன, எதனால் என்பதை விரிவாக இக்கட்டுரையில் பார்க்கலாம்.

அக்டோபர் 27 – விக்கிரவாண்டி மாநில மாநாடு
அக்டோபர் 27, தமிழக வெற்றிக் கழக கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு பெரிய திருப்பமாக அமைந்தது. விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாடு, தவெக ஒரு ‘சினிமா சந்திப்பு’ கட்சி அல்ல, அமைப்புடன் இயங்கும் ஒரு பெரிய அரசியல் இயக்கம் உறுதிப்படுத்தியது. இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தவெக மாவட்ட மற்றும் மண்டல பொறுப்பாளர்கள், இளைஞர் ஆதரவாளர்கள் என நடிகர் விஜய், தலைவர் விஜயாக மாறிய தருணம் வந்தது என்றே கூறலாம். இந்த நிகழ்வில் விஜய், அரசியல் கொள்கை, கோட்பாடு, குறிக்கோள்கள், பணிக்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை தெளிவாக முன்வைத்தார்.
செப்டம்பர் 27 – கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம்
செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக ஏற்பாடு செய்த பிரச்சார கூட்டம், கட்சியின் மாநில அளவிலான முதல் ‘பவர் ஷோ’ என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. மக்கள் திரண்ட இந்த நிகழ்வு, விஜயின் அரசியல் வருகைக்கு பொதுமக்கள் அளிக்கும் வரவேற்பை தெளிவாக காட்டியது. கரூர் முழுவதும் மக்கள் அலை பெருகியதால், கூட்ட நெரிசலில் துரதிர்ஷ்டவசமாக 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடந்தது.
அக்டோபர் 27 – உயிரிழந்த குடும்பங்களுடன் நேரடி சந்திப்பு
அக்டோபர் 27 கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களை விஜய் நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு, வெறும் அரசியல் நடவடிக்கையாக இல்லாமல், மனதார பங்கேற்ற ஒரு மனிதநேய செயல் என உயிரிழந்தோரின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கூறினர். கரூரில் ஏற்பட்ட விபத்துக்கு விஜய் தான் காரணம் என்று ஆளும் கட்சியான திமுக இன்று வரை குற்றஞ்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 27 – தவெக-வில் இணைந்த செங்கோட்டையன்
இன்று (நவம்பர் 27) தவெக-யின் அரசியல் பயணத்தில் மிகப்பெரிய அதிர்வாக அமைந்தது. 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக அரசியலில் முக்கிய தூணாக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவரை தவெக-யில் வரவேற்றார் விஜய், தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட அமைப்பு பொறுப்புகள் எனப் பல முக்கிய பதவிகளை வழங்கினார். இப்படி ஒரு அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர் தவெக-வில் சேர்வது, கட்சியின் அமைப்பு வலிமையை மிக அதிகமாக உள்ளது உயர்த்தும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நான்கு 27-களும் சேர்ந்து தவெக-யை 2026 தேர்தலுக்கான மிக வலுவான சக்தியாக மாற்றியுள்ளது என்றே கூறலாம்.

