MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திரையரங்கில் டிக்கெட் கட்டணம் குறைகிறது.? எவ்வளவு குறைகிறது .? எந்த தேதி முதல் அமல்.? வெளியான முக்கிய தகவல்

திரையரங்கில் டிக்கெட் கட்டணம் குறைகிறது.? எவ்வளவு குறைகிறது .? எந்த தேதி முதல் அமல்.? வெளியான முக்கிய தகவல்

திரையரங்கில் கூட்டம் குறைந்து வருவதையடுத்து டிக்கெட் கட்டணத்தை குறைக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Feb 13 2024, 11:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

திரையரங்கில் குறையும் கூட்டம்

தமிழகத்தில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் திரையங்கிற்கு வரும் நிலையில், பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு மட்டுமே திரையரங்கம் கிடைப்பதாகவும், குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்கம் கிடைக்கவில்லையெனவும் புகார் கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஓடிடி வரவு காரணமாக திரையரங்கில் வரும் கூட்டமும் பெரிதும் குறைத்துவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து திரையரங்கிற்கு அதிகளவு மக்களை ஈர்க்கும் வகையில் திரையரங்கு கட்டணத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் சங்கம் திரையரங்கு உரிமையாளர்களை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எழுதியுள்ள கடிததத்தில், கடந்த நவம்பர் 2023 முதல், திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்து வருவது குறித்து தங்களின் குரல் பதிவை கேட்டோம். இந்த விஷயம் தயாரிப்பாளர்களையும் மிகவும் பாதித்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். 
 

25

கட்டணத்தை குறைக்க திட்டம்

குறிப்பாக சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை பெரும்பாலான பார்வையாளர்கள் திரையரங்குகளில் பார்த்து நல்ல வசூல் தரும் போக்கு குறைந்து வருவது அனைவருக்கும் கவலை தருகிறது. விதிவிலக்காக சில சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு மட்டும் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. ஆனால் அவ்வாறு எப்போதாவது வரும் வெற்றி, நம் இரு தரப்பினருக்கும் போதாது. சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பது நம் இருவரின் பொறுப்பு. இதை மனதில் வைத்து நாம் இரு சங்கங்களும் சேர்ந்து சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியமாக உள்ளது.

 

காசுக்காக கடைசில இப்படி இறங்கிட்டாரே... ஆபாச பட ஹீரோ ஜானி சின்ஸ் உடன் நடித்த ரன்வீர் சிங் - வீடியோ இதோ

35
Multiplex theater India vs Pakistan match

Multiplex theater India vs Pakistan match

ரீ ரிலிஸ் திரைப்படங்களுக்கு வரவேற்பு

நல்ல திரைப்படங்களை, சரியான விளம்பரங்களுடன் கொடுப்பது தயாரிப்பாளர்களின் பொறுப்பு என்றால், திரையரங்கில் அத்தகைய படங்களை பார்ப்பது அதிகம் செலவாகிற விஷயம் என்று மக்களிடம் உள்ள பொதுவான ஒரு எண்ணத்தை உடைப்பது திரையரங்கு உரிமையாளர்களின் பொறுப்பு. சென்னையில் ரீ-ரிலீஸ் என்ற முறையில் சில முக்கிய படங்களை திரையரங்கில், குறைந்த டிக்கெட் கட்டணத்தில் வெளியிட்டு கமலா திரையரங்கம் நல்ல சாதனைகளை புரிந்துள்ளது. குறைந்த டிக்கெட் கட்டணங்கள் பார்வையாளர்களை கவருகின்றன என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. 

45

பிப்ரவரி 23 முதல் டிக்கெட் கட்டணம் குறைப்பு

இதை முன்னதாரணமாக வைத்து சிறு பட்ஜெட் படங்களை பொதுமக்கள் திரையரங்கு வந்து பார்ப்பதை இலகுவாக்க, கீழ்கண்ட மாற்றி அமைக்கப்பட்ட டிக்கெட் கட்டணங்களை பிப்ரவரி 23 முதல் வெளியாகும் படங்களுக்கு தாங்கள் வசூலிக்க வேண்டும் என்று கோருகிறோம். இந்த ஒரு மாற்றம், மக்கள் மத்தியில் மீண்டும் திரையரங்கு வந்து சிறு பட்ஜெட் படங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

55

எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும்

அதன் படிசிறுபட்ஜெட் படங்கள் 5 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு 150 திரையரங்குளில் வெளியாகும் படங்களுக்கு சென்னை, சேலம், திருச்சி, மதுரை, மற்றும் சேலம் நகரங்களில் அதிகபட்சமாக 100 ரூபாயும், மீதி அனைத்து நகரங்களிலும் அதிகபட்சமாக 80 ரூபாய் வசூலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் 5 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களுக்கு சென்னை, சேலம், திருச்சி, மதுரை, மற்றும் சேலம் நகரங்களில் அதிகபட்சமாக 150 ரூபாயும், மீதி அனைத்து நகரங்களிலும் அதிகபட்சமாக 120 ரூபாய் வசூலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

அய்யா எங்கள மன்னிச்சிடுங்க... இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருதை திருப்பிக்கொடுத்த கொள்ளையர்கள்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved