- Home
- Tamil Nadu News
- ஸ்டாலினை சம்பவம் செய்த விஜய் ரசிகர்கள்..! லேப்டாப் ஸ்டாலின் படத்தின் மீது விஜய் படம் ஒட்டி மறைப்பு
ஸ்டாலினை சம்பவம் செய்த விஜய் ரசிகர்கள்..! லேப்டாப் ஸ்டாலின் படத்தின் மீது விஜய் படம் ஒட்டி மறைப்பு
தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப் திட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் மீது மாணவர்கள் நடிகர் விஜய் ஸ்டிக்கரை ஒட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த சம்பவம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அரசு லேப்டாப்பில் விஜய் படம்
தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் சினிமா ரசிகர்களுக்கிடையேயான போட்டி எப்போதும் கவனம் ஈர்க்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக நடிகர் விஜயின் ரசிகர்கள் மற்றும் திமுக ஆதரவாளர்கள் இடையே சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து மோதல்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில், சமீபத்தில் ஒரு புதிய சர்ச்சை இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு “உலகம் உங்கள் கையில்” என்ற பெயரில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது. ஜனவரி 5, 2026 அன்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மொத்தம் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச லேப்டாப் திட்டம்
இதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கு 10 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த லேப்டாப்களில், திட்டத்தின் கருப்பொருளான “உலகம் உங்கள் கையில்” என்ற வாசகத்துடன், முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இது அரசின் கல்வி நலத்திட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டது.
ஆனால், சில மாணவர்கள் இந்த ஸ்டிக்கரை மறைத்து, அதன் மேல் நடிகர் விஜயின் புகைப்படம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். குறிப்பாக, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
என்ன பசங்க இப்டி இறங்கிட்டாங்க...😄🔥
ஆனா இதுல கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் front la 2 போட்டோ கூட ok but mouse pad பக்கத்துலயும் போட்டோ 🙄 pic.twitter.com/udv1tJdYBR— Monkey (@Animalofficiall) January 6, 2026
இந்த சம்பவம் இணையத்தில் இருவிதமான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பு இதை “தளபதி ரசிகர்களின் சம்பவம்” எனக் கொண்டாடி பகிர்ந்துகொண்டது. மறுபுறம், பலர் இது அரசு நலத்திட்டத்தை அவமதிப்பதாகவும், அரசியல் எதிர்ப்பின் வெளிப்பாடாகவும் விமர்சித்தார்கள். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவிப் பொருளை அரசியல் சின்னமாக மாற்றுவது சரியா என்ற கேள்வியும் எழுந்தது.
லேப்டாப்பில் விஜய் ஸ்டிக்கர்
விஜய் ரசிகர்களின் இந்த வகையான நடவடிக்கைகள் புதிதல்ல. கடந்த காலங்களில் திரைப்பட வெளியீடுகள், அரசியல் மேடை நிகழ்ச்சிகள், கட்சி கூட்டங்கள் போன்ற சமயங்களில் ரசிகர்களின் உற்சாகம் பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இம்முறை அரசு வழங்கிய இலவச லேப்டாப் போன்ற கல்வி நலத்திட்டம் நேரடியாக இலக்காக்கி தவெகவினர் இணையத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.
அரசு Laptop இப்போ TVK Laptop ஆயிடுச்சி 😂🔥❤️#TVKpic.twitter.com/9fIhk3NsD8
— RamKumarr (@ramk8060) January 7, 2026
சிலர் இதை திமுகவுக்கு எதிரான அரசியல் வெளிப்பாடாக பார்க்க, மற்றவர்கள் இது இளைஞர்களின் ரசிக மனநிலையின் வெளிப்பாடு மட்டுமே எனக் கூறுகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மேலும் சூடாக்கியுள்ளன என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

