MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Budget 2026 : இலவச ஆடு, மாடுகள் வழங்கும் புதிய திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

TN Budget 2026 : இலவச ஆடு, மாடுகள் வழங்கும் புதிய திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

TN Budget 2026 : தமிழக அரசின் 2026-27 நிதிநிலை அறிக்கையில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் புதிய இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Aug 05 2026, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரூ.167 கோடி நிதி ஒதுக்கீடு
Image Credit : Chatgpt

ரூ.167 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் இரண்டு முக்கிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.167 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

இதையும் படிங்க : Small Business : வீட்டிலிருந்தே தொடங்கலாம்... நல்ல வருமானம் தரும் 5 சிறிய உணவுத் தொழில்கள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
10,000 பெண்களுக்கு இலவச கறவை மாடுகள்
Image Credit : Chatgpt

10,000 பெண்களுக்கு இலவச கறவை மாடுகள்

கிராமப்புற பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு இலவசமாக கறவை மாடுகள் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பால் உற்பத்தி அதிகரிப்பதுடன், பெண்களுக்கு நிலையான வருமான வாய்ப்பும் உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Hotel Mirrors : ஹோட்டல் பெட்டுக்கு எதிரே கண்ணாடி ஏன்? இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா?

Related Articles

Related image1
Bank : வங்கியில் பழைய கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி? தெரிய வேண்டிய விதிமுறைகள்!
Related image2
Small Business : வீட்டிலிருந்தே தொடங்கலாம்... நல்ல வருமானம் தரும் 5 சிறிய உணவுத் தொழில்கள்!
34
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்
Image Credit : Chatgpt

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்

மேலும், 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்' என்ற புதிய திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ்,

  • கைம்பெண்கள்
  • ஆதரவற்ற பெண்கள்
  • திருநங்கைகள்
  • மாற்றுத்திறனாளிகள்

ஆகியோருக்கு 100 சதவீத மானியத்தில் தலா 5 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Shasha Rajayoga : ராஜயோகங்களில் நம்பர் ஒன்! சச ராஜயோகத்தால் அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு இந்த 4 ராசிகள் தொட்டதெல்லாம் ஹிட்டு!

44
யாருக்கெல்லாம் பயன்?
Image Credit : Chatgpt

யாருக்கெல்லாம் பயன்?

இந்த இரண்டு திட்டங்களும் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக சுயதொழில் மற்றும் கால்நடை வளர்ப்பின் மூலம் குடும்ப வருமானத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

திட்டங்களுக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட விரிவான வழிகாட்டுதல்களை கால்நடை பராமரிப்புத் துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.167 கோடி நிதி ஒதுக்கீடு

  • கறவை மாடுகள் வழங்கும் திட்டம் – ரூ.57 கோடி
  • வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் – ரூ.110 கோடி
  • மொத்த ஒதுக்கீடு – ரூ.167 கோடி

இந்த அறிவிப்புகள், பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் கிராமப்புற கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றன.

இதையும் படிங்க : Bank : வங்கியில் பழைய கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி? தெரிய வேண்டிய விதிமுறைகள்!

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தமிழ்நாடு பட்ஜெட்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக பட்ஜெட் 2026 - 27: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் + பட்டுப்புடவை..! யாருக்கு கிடைக்கும்?
Recommended image2
தமிழக பட்ஜெட் 2026 : பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் உடன் சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்!
Recommended image3
தமிழக பட்ஜெட் 2026-27: அண்ணா பிறந்தநாளில் மாமா தரும் தங்க மோதிரம்! துள்ளி குதிக்கும் இளஞ்ஜோடிகள் - யார் யாருக்கு கிடைக்கும்?
Related Stories
Recommended image1
Bank : வங்கியில் பழைய கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி? தெரிய வேண்டிய விதிமுறைகள்!
Recommended image2
Small Business : வீட்டிலிருந்தே தொடங்கலாம்... நல்ல வருமானம் தரும் 5 சிறிய உணவுத் தொழில்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved