MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Free Electricity : 200 யூனிட் இலவச மின்சாரம்.. கண்டிஷன் போட்ட முதல்வர் விஜய்.. யாருக்கெல்லாம் இலவசம் தெரியுமா?

Free Electricity : 200 யூனிட் இலவச மின்சாரம்.. கண்டிஷன் போட்ட முதல்வர் விஜய்.. யாருக்கெல்லாம் இலவசம் தெரியுமா?

“200 யூனிட் இலவச மின்சாரம்” - இந்த ஒரு வாக்குறுதி பல குடும்பங்களுக்கு நிம்மதி தரும்னு நினைச்சாங்க. ஆனால், புதிய அறிவிப்பில் வந்த ஒரு நிபந்தனை, அந்த எதிர்பார்ப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : May 10 2026, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
200 யூனிட் இலவச மின்சாரம்
Image Credit : Asianet News

200 யூனிட் இலவச மின்சாரம்

தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கிய நிலையில், ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் கவனம் செலுத்தப்பட்ட யூ. 200 இலவச மின்சாரம்” வாக்குறுதி தொடர்பாக முதல் கோப்பிலேயே அவர் கையெழுத்திட்டது அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடத்திலும் உள்ளது. ஆனால், அறிவிப்பில் உள்ள நிபந்தனைகள் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முதல்வர் விஜய் முதல் கையெழுத்து
Image Credit : ANI

முதல்வர் விஜய் முதல் கையெழுத்து

புதிய அரசாணையின்படி, இரண்டு மாதங்களில் 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று அரசு வாதிடுகிறது. அதே நேரத்தில், 500 யூனிட்டைத் தாண்டும் பயன்பாடு உள்ள வீடுகளுக்கு முழு சலுகையும் கிடைக்காது என்பது முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

35
100 யூனிட் இலவச மின்சாரம்
Image Credit : ANI

100 யூனிட் இலவச மின்சாரம்

முன்பு நடைமுறையில் இருந்த 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து ஏற்பட்ட குழப்பத்துக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய முறையில், 500 யூனிட்டிற்குள் உள்ளவர்கள் 200 யூனிட்களை இலவசமாகப் பெறுவார்கள்; 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு பழைய 100 யூனிட் சலுகை தொடரும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இருந்தாலும், “அனைவருக்கும் இலவசம்” என்ற தேர்தல் முழக்கத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்த வரம்பு சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

45
அரசின் நிபந்தனை
Image Credit : ANI

அரசின் நிபந்தனை

இந்த நிபந்தனைக்கு பின்னால் “மின்சார சேமிப்பு” மற்றும் “நிதி கட்டுப்பாடு” என்ற காரணங்களை அரசு முன்வைக்கிறது. அதிக பயன்பாடு உள்ளவர்களுக்கு மானியம் வழங்குவதை கட்டுப்படுத்துவதன் மூலம் செலவினங்களை சமன்படுத்தும் முயற்சி இதுவாக பார்க்கப்படுகிறது. ஆனால், கோடைகாலங்களில் ஏசி போன்ற சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் குடும்பங்களுக்கு இது கூடுதல் சுமையாக மாறுமா என்ற கேள்வி எழுகிறது.

55
புதிய மின்சார சலுகை
Image Credit : ANI

புதிய மின்சார சலுகை

மின்சார அறிவிப்பைத் தவிர, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக முதலமைச்சர் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் “சிங்கப் பெண்” சிறப்பு அதிரடிப்படை அமைப்பு, மாநிலம் முழுவதும் 65 இடங்களில் போதைப்பொருள் தடுப்புப் படை அமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் சமூக பாதுகாப்பு நோக்கில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகின்றன. இருப்பினும், சில நாட்களில் மின்சார சலுகை தொடர்பான விவாதங்கள் சில அரசியல் சூடுபிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
விஜய் (நடிகர்)
தமிழக வெற்றி கழகம்
இலவச மின்சாரம்
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
TNEB : மின்தடையை இந்த வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம்! 24 மணி நேரமும் சேவை!
Recommended image2
PMFME Scheme: சொந்தமாக ஊறுகாய், மசாலா பிசினஸ் தொடங்க விருப்பமா? ரூ.10 லட்சம் மானியம் வழங்கும் மத்திய அரசு; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!
Recommended image3
Now Playing
வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
Related Stories
Recommended image1
விஜய் செய்தது ஏத்துக்கவே முடியாத குற்றம்.! முதல் நாளே முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்த வேல்முருகன்.!
Recommended image2
Now Playing
இந்த விஜய் தப்பு பண்ண மாட்டான்.. யாரையும் தப்பு பண்ணவும் விட மாட்டான் - முதல்வர் சி.ஜோசப் விஜய்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved