MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு குஷியான செய்தி.! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு குஷியான செய்தி.! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு  சென்னையில் இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கிடைக்கிறது

2 Min read
Author : Ajmal Khan
Published : May 14 2025, 07:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
Image Credit : our own

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

ஒவ்வொரு ஆண்டும் கல்வியை முடித்து பல லட்சம் இளைஞர்கள் வேலை தேடி வருகிறார்கள். அந்த வகையில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு இருந்தாலும் அரசு பணியை குறியாக வைத்து இரவு பகலாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வருகிறார்கள். 

வசதி படைத்தவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பணம் கட்டி பயிற்சி செல்கின்றனர். ஆனால் ஏழை, எளிய மாணவர்களால் பணம் கட்ட முடியாத காரணத்தால் வீட்டிலேயே படித்து வருகிறார்கள். அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - ஜூலை 12ஆம் தேதி தேர்வு
Image Credit : our own

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - ஜூலை 12ஆம் தேதி தேர்வு

இந்த நிலையில் குரூப் 4 தேர்வான கிராம நிர்வாக அலுவலர் (V.A.O.), இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர், ஸ்டெனோகிராபர், பில் கலெக்டர், கள ஆய்வாளர், வரைவாளர் போன்ற பணிகளுக்காக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் வெற்றி பெறும் வகையில் இலவச பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

35
டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி
Image Credit : our own

டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி

சென்னை மாவட்டம், கிண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 12-05-2025 முதல் நடைபெற்று வருகிறது.

45
டிஎன்பிஎஸ்சி - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி
Image Credit : our own

டிஎன்பிஎஸ்சி - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி

இப்பயிற்சி வகுப்பானது வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடத்தப்படும். இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப்படிவ நகலுடன் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை -32, கிண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

55
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு அழைப்பு
Image Credit : our own

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு அழைப்பு

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார். இதே போல மற்ற மாணவர்களுக்கும் இலவச பயிற்சி முகாமானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
டி.என்.பி.எஸ்.சி.
தேர்வு
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Now Playing
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், செயல்பாடுகளைப் பார்த்து விமர்சிப்போம் ! தமிழிசை பேட்டி
Recommended image2
Now Playing
கிண்டி அரசினர் ஐ.டி.ஐ-யில் புதிய மின்சார திறன் ஆய்வகங்கள் திறப்பு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
Recommended image3
Now Playing
சூரசம்ஹாரத்திற்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு: ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்!
Related Stories
Recommended image1
வீட்டிலிருந்தே TNPSC குரூப் 4க்கு தயார் ஆவது எப்படி? உங்களுக்கான வின்னிங் ஸ்ட்ராடஜி!
Recommended image2
TNPSC, SSC, RRB போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு சந்தோஷமான செய்தி.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved