ஒரே அறிக்கை! அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த எச்சரிக்கை! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகிகள்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகளில் தேர்வுக்கு முன் பெற்றோருக்கு பாத பூஜை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பள்ளிகளில் பாத பூஜை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
School Student
பள்ளியில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு பொது தேர்வினை ஊக்கத்துடன் எதிர்கொள்ளும் வகையிலும், பெற்றோர்கள் - குழந்தைகள் இடையில் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையிலும், மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
Foot Puja
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகளில் தேர்வுக்கு முன் பள்ளிகளில் தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் மாணவர்கள் கொடுமைப்படுத்துவதாக பலர் புகார் தெரிவித்தனர்.
CEO
இந்நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் எந்த நிகழ்வும் மேற்கொள்ளக்கூடாது என்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
Pudukkottai
அதில், பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் நடவடிக்கைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்களின் மன நலம் மற்றும் கௌரவத்திற்கு பாதகமாக இருக்கக்கூடிய செயல்பாடுகளை அனுமதிக்க கூடாது. பாத பூஜை தொடர்பாக புகார்கள் கிடைத்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Government warning
இந்த சுற்றிக்கையை கண்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் பல்வேறு மாணவ மாணவிகள் இது நம்பிகையை சார்ந்தது என்றும் நம்பிக்கையின் அடிப்படையில் பாத பூஜை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.