இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கப்போவது காங்கிரஸ் அல்ல? வேட்பாளர் இவர் தான்?
Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட மறுத்துவிட்டதால், காங்கிரஸுக்கு தொகுதியை ஒதுக்குவதா அல்லது திமுகவே போட்டியிடுவதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Thirumahan Everaa
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டார். இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். பின்னர் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி மாரடைப்பால் திருமகன் ஈவெரா உயிரிழந்தார்.
Sanjay Sampath
பின்னர் 2023ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது திமுக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட விரும்பாததால் அவரது இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வைக்க திட்டமிட்டார்.
evks elangovan
ஆனால் முதல்வர் ஸ்டாலின் மணப்பாக்கத்தில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கு சென்று அரசியல் அனுபவம் மிக்க மூத்த தலைவரான நீங்கள் இடைத்தேர்தலில் நிற்க வேண்டும் என வலியுறுத்தியதை ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 34 ஆண்டுகளுக்கு பின் சட்டமன்றத்திற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் நுழைந்தார்.
evks elangovan passed away
ஆனாலும் மகன் இறப்பை தாக்கிக்கொள்ள முடியாமல் மனவேதனையில் இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டு ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 14ம் தேதியில் உயிரிழந்தார்.
MK Stalin
பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைவதற்குள் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தில் இருந்து அவரது மகன் சஞ்சய் சம்பத்தை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் காங்கிரஸ் கட்சியில் பல அணிகள் உள்ளதால் வேறு யாருக்காவது கொடுத்தால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்பதால் இந்த தொகுதியை காங்கிரசுக்கு கொடுப்பதை விட திமுகவே போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Erode East By Election
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதி காலியானால் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த தொகுதிக்கான தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. பிப்ரவரியில் மாதம் நடைபெறும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Chandrakumar
குறிப்பாக இந்த தொகுதியில் பலத்தை நிரூபிப்பதன் மூலம் 2026 தேர்தலுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க முடியும் என்று திமுக நினைக்கிறது. ஆகையால் ஆளுங்கட்சி என்பதால் எப்படியும் வெற்றி உறுதி என்பதால் இப்பவே அமைச்சர் முத்துசாமி மற்றும் செந்தில் பாலாஜி மூலமாக எப்படியாவது சீட் பெற்று விட வேண்டும் திமுக நிர்வாகிகள் போட்டா போட்டி போடுகின்றனர். குறிப்பாக திமுக மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், தேமுதிகவில் இருந்து வந்த முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் பெயர் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையுடன் திமுக ஆலோசித்து முறைப்படி அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகிறது.